வெளியிடப்பட்ட நேரம்: 11:54 (22/02/2017)

கடைசி தொடர்பு:12:57 (22/02/2017)

ரித்திகா மீதான வன்கொடுமையை மறைக்கிறதா போலீஸ்? உ.வாசுகி

ரித்திகாவின் தாய்


மிழகத்தில், பாலியல் வன்கொடுமைக்கு குழந்தைகள் உள்ளாவது, அவலத்தின் உச்சம். 3 வயதான ரித்திகா, கொல்லப்பட்டு குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட விஷயம் தமிழகத்தை உலுக்கியிருக்கிறது. கொலை என்கிறது போலீஸ். ஆனால், பாலியல் வன்கொடுமைக்கு குழந்தை உள்ளாக்கப்பட்டுள்ளாள் என்கிறார், ஜனநாயக மாதர் சங்கத் தலைவி உ.வாசுகி. அவரிடமே நடந்தவற்றைக் கேட்டோம்...

''சென்னை திருவொற்றியூரை அடுத்துள்ள எர்ணாவூர் சுனாமி குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 3 வயது குழந்தை ரித்திகா, கொலை செய்யப்பட்டுள்ளார். அவளது உடலில் இருந்த நகைக்கு ஆசைப்பட்டு எதிர் வீட்டுப் பெண்ணே கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. எங்களைப் பொறுத்தவரை பாலியல் வன்கொடுமை என்பதை தனிமனித வக்கிரமாகவோ,  மனச்சிதைவாகவோ பார்க்க முடியவில்லை. இதை, சமூக மனசாட்சியின் ஒரு பகுதி ஒட்டுமொத்தமாக அழுகியிருப்பதாக உணர்கிறேன். 

காரணம், இன்றைய இளைஞர்களின் வாழ்நிலை ஆரோக்கியமாக இல்லை. எதிர்பார்த்ததைவிட அதிகம், எளிதில் கிடைக்கிறது. விளைவு செல்போனிலேயே ஆபாசப் படங்களைப் பார்த்து மனதைக் கெடுத்துக்கொள்கிறார்கள். பள்ளிக் கல்வியிலும் பெண் சமத்துவத்துக்கான விஷயங்கள் இல்லை. பள்ளிக் கல்வி முடித்து வெளிவரும் மாணவர்களை, முழுமையான மனிதனாக மாற்றுவதற்கான கூறுகள் பாடத் திட்டத்தில் இல்லை. யோசிக்கவே விடாத மனத்தையும், எதிர்காலத்தைப் பற்றிய பயமும் அற்ற வக்கிர மனம் படைத்தவர்கள் கையில் நலிந்த குழந்தைகள் சிக்குகிறார்கள். விளைவு... ஆங்காங்கே நாம் கேள்விப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் அரங்கேறுகின்றன. இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுபவர்களில் 25சதவிகிதம் பேரே தண்டனைபெறுகின்றனர். மீதம் உள்ள 75 சதவிகிதம் பேர் தப்பித்து விடுகின்றனர். தப்பு செய்யத் துணிபவர்களுக்கு, இப்படி தப்பிப்பவர்கள் பற்றிய எண்ணமே வருகிறது. 

குற்றங்களை விசாரிப்பதில் காவல் துறையின் அணுகுமுறை வேதனையாக உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், வேதனையை ஒருபுறம் சுமந்துகொண்டு, மறுபுறம் எங்கே புகார் கொடுக்க வேண்டும் என்று அலைவது போன்ற கொடுமையான விஷயம், நம் நாட்டில் மட்டுமே நடக்கும். காவல்துறையினரின் அலட்சியத்தாலும், நடத்தப்படும் விதத்தாலும் பல பேர் புகார் கொடுக்கவே முன்வருவதில்லை வாசுகி.உஎன்பதே உண்மை. ரித்திகா விஷயத்திலும் அதுவே நடந்துள்ளது.

குழந்தை ரித்திகாவுக்கு நடந்த கோர மரணம் எங்களை வெகுவாக பாதித்தது. இதில், போலீசாரின் நடவடிக்கை குறித்துத் தெரிந்துகொள்ள அந்தப் பகுதிக்கு நேரில் சென்றோம். ரித்திகாவின் டெத் ரிப்போர்ட்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறது. நேற்று மதியம் 12 மணி வரை எஃப் ஐ ஆர் போடலை. பாலியல் பலாத்காரமா என்பதைப் பதிவுசெய்ய, பிரேதப் பரிசோதனை அவசியம் என்றார்கள். கொலை நடந்திருக்கு, கடத்தல் நடந்திருக்கு,கைதுசெய்யப்பட்ட பெண்ணே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்காங்க. இவ்வளவு நடந்த பின்னும் எப்.ஐ.ஆர் ஏன் போடலைன்றது ஆச்சர்யமா இருக்கு. எப்.ஐ.ஆர்.ல இது குறித்த செக்ஷன் விஷயங்களையாவது போடணும். பிரேதப் பரிசோதனை வந்த பின்னாடி, பலாத்காரமாக இருந்தால், அதையும் எப்.ஐ.ஆர்,ல சேர்த்துக்கலாம். போலீஸ் மெத்தனமா செயல்படுறது வேதனையும், ஆச்சர்யமும் அளிக்குது.

ரித்திகா விஷயத்தில், எதிர்வீட்டுப் பெண்ணே கொலுசுக்காகக் கொலை பண்ணினதா சொல்லியிருப்பது அதிர்ச்சி அளிக்குது. வழக்கமா குழந்தைகளைப் பக்கத்து வீட்டில் உள்ளவர்களை நம்பி விட்டுட்டுப் போவோம். இனி, அதுபோல முடியாது என்பதை அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் உறுதிசெய்கின்றன. இது மாதிரியான சூழல், மக்களிடையே நம்பிக்கையற்ற மனநிலையை உருவாக்கும். இதையும் நான் பெரிய பாதிப்பாகத்தான் பார்க்கிறேன். இனிமேல் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை நம்பிக்கூட குழந்தைகளை விட முடியாது. ரித்திகா விஷயத்தில் அவரின் பெற்றோர்கள் மூலம் காவல்துறையினரிடம் எஃப் ஐ.ஆர் போட வலியுறுத்தியுள்ளோம். பிரேதப் பரிசோதனை அறிக்கையும் கோரப்பட்டுள்ளது. போலீஸ் மேலும் இந்த வழக்கில் மெத்தனம் காட்டினால், ஜனநாயக மாதர் சங்கம் அடுத்தடுத்து போராட்டங்களை நடத்தும்" என்று காட்டமாகச் சொல்லி முடித்தார் வாசுகி. 


- யாழ் ஸ்ரீதேவி 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்