Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சட்டென முடிவெடுக்க 6 வழிகள் இருக்கு கேர்ள்ஸ்! #DecisionMaking

முடிவெடுக்க

’இன்னைக்கு பிங்க் கலர் டிரஸ் போடலாமா... கிரீன் கலர் போடலாமா?’, ‘டீ சாப்பிடலாமா... காபி  சாப்பிடலாமா?’, ’ஃப்ளாட்ஸ் போடலாமா... ஷூ போடலாமா?, ‘இன்ஜினீயரிங் எடுக்கலாமா... இல்ல, ஆர்ட்ஸ் போதுமா?’, ’நான் இதை இப்படிச் சொல்லாம அப்படிச் சொல்லி இருக்கணுமோ?’, 'ராகுலுக்கு ஓகே சொன்னால், நம்ம ஃப்ரெண்ட்ஸ் என்ன நினைப்பாங்க?’ - இப்படி பல விஷயங்களில் முடிவெடுக்கிறதுல நம்ம பொண்ணுங்களுக்கு மெகா சீரியலா சிக்கல் நீண்டுகிட்டே போகும். முடிவெடுக்க முடியாம... தொடரும் போட்டு நிறுத்திவைக்கிற கதைகளும் நடக்கும். சராசரியாக ஒருவர் ஒரு நாளைக்கு 35,000 முடிவுகள் எடுக்குறாங்களாம். இவ்ளோ முடிவுகள் எடுத்தா நம்ம மூளை என்ன ஆகும்? அதனால், எந்த விஷயமா இருந்தாலும் ரிலாக்ஸ் பண்ணிட்டு, ஸ்மூத்தாக முடிவெடுக்க இந்த ஆறு வழிகளை டிரை பண்ணிப் பாருங்க. இதில், ஒண்ணாவது உங்களுக்கு நிச்சயம் உதவும்.

1. பொதுவாகவே, எந்த ஒரு விஷயத்திலும் 'இதுவா... அதுவா?'னு இரண்டே இரண்டு ஆப்ஷனில்தான் யோசிச்சுகிட்டே இருப்போம். அப்படி இல்லாமல், மூணாவதாக ஒரு ஆப்ஷனை யோசிச்சு குறிச்சு வெச்சுக்கங்க. அதை எழுதும்போதே, நமக்கு எது சரியா வரும்னு மைண்ட்ல பல்பு எரியும்.
 
2. 'இந்த வயசுல கல்யாணம் பண்ணிக்கலாமா? இப்பவே வெளிநாட்டுல போய் செட்டில் ஆகலாமா?'னு வாழ்க்கைப் பற்றி சில விஷயங்களில் ப்ளான் பண்ணித்தான் முடிவெடுக்கணும். அதுக்கும் ஒரு ஈஸி வழி இருக்கு. 'இந்த முடிவு எடுத்ததுக்கு அப்புறம் பத்து மணி நேரத்துல என்ன நடக்கும், அடுத்த பத்து வாரங்களில் எப்படி இருக்கும், பத்து மாசங்களுக்குப் பிறகு என்ன நடக்கலாம், பத்து வருஷங்கள் கழிச்சு திரும்பிப் பார்க்கும்போது நிறைவா இருக்குமா?'னு மனசுக்குள்ளே ஃபார்வேர்ட் பட்டனை அழுத்திப் பாருங்க. என்ன செய்யலாம்னு ஒரு முடிவுக்கு நிச்சயமா வந்திருப்பீங்க.

3. நமக்குனு சில நம்பகமான நண்பர்களும் உறவினர்களும் இருக்கத்தான் செய்வாங்க. நீங்க ரொம்ப குழப்பமா இருக்குறது, நீங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்களுக்குத் தெரிஞ்சுடும். அப்படிபட்டவங்கிட்ட கொஞ்சமும் தயங்காமல் அட்வைஸ் கேளுங்க. அவங்க சொல்றதையே செய்யணும்னு இல்லை. ஆனால், அதிலிருந்து உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கலாம்.


4. சில சமயத்துல, கொஞ்சம் நாள் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறதுகூட நல்லதுதான். ஏன் தெரியுமா? பொண்ணுங்களுக்கு, ஆண்களைவிட தன்னம்பிக்கை அதிகம். 'எனக்கு தள்ளிப்போடறது பிடிக்காது. நான் சட்டென முடிவெடுக்கிற பேர்வழி'னு சொல்லிகிட்டு, தப்பான முடிவு எடுக்க வாய்ப்பு இருக்கு. அதனால, சின்ன விஷயமாக இருந்தாலும், குறைந்தபட்சம் அரை மணி நேரம் ஆறப் போடுங்க. அதனால், எதுவும் மாறிடாது.

5. 'இப்படி ஆகிட்டா என்ன பண்றது?' - பல நேரங்களில் நம்ம மனசுக்குள்ளே வந்துபோகிற பயங்கரமான கேள்வி இது. இந்தக் கேள்வி ஏன் வருது தெரியுமா? படிப்பு, காதல், கல்யாணம், வேலை, குடும்பம், குழந்தைகள் என நாம ஓடிட்டே இருந்து பழகிட்டோம். இதுல சின்ன சறுக்கல் வந்தாலும் ‘ஐய்யயோ’னு பதறிடறோம். இது தேவையே இல்லாத பதற்றம். சில தவறுகள்கூட நமக்கு நல்ல அனுபவம்தான் என நினைச்சாலே போதும். அடுத்த ஓட்டத்துக்கு தயாராடுவீங்க.
 
6. ’ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் எனக்கு ரஸ்கு சாப்பிடற மாதிரி’னு நம்ம வாழ்க்கையில் சில முடிவுகளை எடுக்கிறதும் நல்லதுதான். உதாரணமா, நமக்கு வெளியூரில் வேலை கிடைச்சு இருக்கும். அந்த ஊருல என்ன  மொழி பேசுறாங்கனுகூட தெரியாது. அந்த ஊரைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டு, கொஞ்சம் ரிஸ்க் எடுத்து, அங்கே போய் வேலைப் பார்க்கலாம். வாழ்க்கையே இந்த மாதிரியான சின்னச் சின்ன சுவாராஸ்யங்கள் நிறைந்ததுதானே!

 

- ஷோபனா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close