Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலகின் முதல் மூன்றாம் பாலின பொம்மை... அமெரிக்காவில் அறிமுகம்!

மூன்றாம் பாலின  பொம்மை

லகிலேயே முதன்முறையாக,  'ஜாஸ்'  என்ற மூன்றாம் பாலின  பொம்மையை வடிவமைத்திருக்கிறது அமெரிக்க பொம்மை நிறுவனமான ‘டோன்னர் டால்’. கடந்த 18-ம் தேதி, நியூயார்க்  டாய் ஃபேர் (ToyFair)  நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தபட்ட  இந்த பொம்மை, ஜாஸ் ஜெக்கிங்ஸ் என்ற  இளம் மூன்றாம் பாலினத்தவரை மாதிரியாகக்  கொண்டு செய்யப்பட்டிருக்கிறது.

பிங்க் நிற மேலாடையும், ஜீன்ஸ் ஷார்ட்ஸூம் அணிந்த இந்த பொம்மைக்கு மாடலான ஜாஸ், தெற்கு  ஃப்ளோரிடா  நகரில், கிரேக் - ஜி யனிட்டே தம்பதிக்கு ஆண்மகனாகப் பிறந்தவர். தன் மூன்று வயதில் தன்னுள் இருந்த பெண் தன்மையை உணர ஆரம்பித்தார் ஜாஸ். தொடர்ந்து, இரண்டு வருட மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளைக் கடந்து, பெண்ணாகவே வாழ துவங்கினார்.  

 Jazz Jenningsமிக இளம் வயதிலேயே தன்னை மூன்றாம் பாலினமாக அடையாளம் காட்டிக்கொண்ட ஜாஸ், தனது ஆறாவது வயதில், அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, மூன்றாம் பாலினத்தைப் பற்றியும், பாலின சமத்துவத்தைப் பற்றியும் பேசியது மிகவும் பிரபலமானது. தொடர்ந்து, தன்னுடைய வாழ்தலை ‘பீயிங் ஜாஸ்: மை லைஃப் அஸ் ஏ(டிரான்ஸ்ஜெண்டர்) டீன்(Being Jazz: My Life as a (Transgender) Teen)' என்ற புத்தகமாக  வெளியிட்டிருக்கிறார்.  மேலும், மூன்றாம் பாலினத்தவர்களைப் பற்றி நேர்மறையான கருத்துகளை தொலைக்காட்சிலும், யூடியூப் வலைதளத்திலும், தொடர்ந்து பேசிவருகிறார்.   

தன்னை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட 'ஜாஸ் பொம்மை'யைப் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாஸ் குறிப்பிடுகையில், 'இந்த முயற்சியால், மூன்றாம் பாலினத்தவர்களும், மற்றவர்களைப் போல இயல்பான மனிதர்களே என்ற எண்ணம் பிறக்கும் என்று நம்புகிறேன்’ என்று பகிர்ந்திருக்கிறார்.  

இதுகுறித்து ஜாஸின் பெற்றோர் கூறுகையில், ‘அவள் சிறுவயதிலேயே பெண்களுக்கான உடைகளை அணியவே விரும்புவாள். ஆனால், வெளியில் செல்லும்போது ஆண் போல் பேன்ட் அணிவாள். அவளது ஐந்தாவது பிறந்தநாள் விழாவில், அவள் நீச்சல் உடை அணிந்துவந்து, தன்னுடைய நண்பர்களுக்கு, ‘நான் ஒரு பெண்’ என்பதைக்  கூறினாள். நாங்கள் அவளுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்தோம்’ என்று தெரிவித்தனர். அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான 'டைம்', உலகிலேயே மிகவும்  செல்வாக்குமிக்க இளைஞர்களில் ஒருவராக, 16 வயதாகும் ஜாஸை தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

'ஜாஸ் பொம்மை'யை வடிவமைத்த ராபர்ட் டொன்னர், ‘ஜாஸ்  மிகவும் துணிச்சலானவள், புத்திசாலி, கற்பனைவளம் மிகுந்தவள், அன்பானவள். இவையனைத்தையும்  ஓர் இயல்பான மனிதனின் பார்வையில் இருந்து கூறுகிறேன்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். 

வரும் ஜூலை மாதம் விற்பனைக்கு வரவிருக்கும் 'ஜாஸ் பொம்மை'யின் விலைமதிப்பு... 71 டாலர்கள்.  

வெல்கம் 'ஜாஸ்'!

- ஷோபனா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close