Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹீரோயின்ஸ் சேஃப்ட்டியா இல்லாம, எப்படி க்ரியேட்டிவ்வா நடிக்க முடியும்?!' - மியா ஜார்ஜ் ஆதங்கம்

நடிகை மியா ஜார்ஜ்

டுத்தடுத்த ஹிட் படங்கள் வரிசையில் இப்போது 'எமன்' படமும் இணைந்திருக்கும் உற்சாகத்தில் இருக்கிறார் நடிகை மியா ஜார்ஜ். இனி ஓவர் டூ கேரளா கோட்டயத்தில் அமைதி காக்கும் நடிகை மியா ஜார்ஜ். 

"சின்ன வயசுல ஸ்கூல் டான்ஸ், ஸ்டேஜ் ட்ராமால நிறைய கலந்துக்குவேன். அப்போ சினிமாவுல நடிக்கணும்னு எந்த ஆசையும் இல்ல. காலேஜ் படிச்சுட்டு இருந்த டைம்ல என்னோட போட்டோ ஒரு மேகஸின்ல வந்துச்சு. அதைப் பார்த்துதான் மலையாளப்படத்துல வாய்ப்புக் கிடைச்சுது. அப்படியே மலையாளம், தமிழ், தெலுங்கு நிறைய படங்கள்ல நடிச்சுட்டேன். யதேச்சையா கிடைச்ச சினிமா வாய்ப்பை, என் திறமைக்கு கிடைச்ச அங்கீகாரமா நினைச்சாங்க என் அம்மா மினி. அவங்களோட தொடர் ஊக்குவிப்புனால என் பயணம் தொடருது. எல்லோரையும் போல எனக்கும் என் அம்மாதான் உலகம். என்கூட எப்பவும் இருப்பாங்க. அதுதான் என் பலமா நினைக்கிறேன்.  

சினிமாவுல வர்றதுக்கும் முன்பும், இப்பவும் சரி ஸ்பெஷல் பியூட்டி சீக்ரெட்னு எந்த விஷயமும் ஃபாலோ செய்றது கிடையாது. ஷூட்டிங், வெயில்ல போயிட்டு வந்தா மட்டும் தயிர், தக்காளி பேஸ்ட் அல்லது லெமன் சாறுல தேன் கலந்து முகத்துல அப்ளை பண்ணிப்பேன். கொஞ்ச நேரம் கழிச்சு குளிச்சா அவ்ளோ ரெஃப்ரெஷிங்கா இருக்கும். அளவா சாப்பிடுவேன். நிறைய தண்ணிக் குடிப்பேன். அவ்ளோதான். 'அமர காவியம்' படத்துல நடிக்க ஆரம்பிச்ச சமயத்துலதான் தமிழ் பேசக் கத்துக்கிட்டு, அப்படியே வீட்டுல பேசிப் பேசி இப்போ நல்லா தமிழ் பேசுறேன்" என சிரிக்கும் மியாவின் பிறந்த மாதம் அத்தனை ஸ்பெஷலாம்.

''எங்க ஃபேமிலியில இருக்குறவங்க நிறைய பேர் ஜனவரியிலதான் பொறந்திருக்காங்க. எங்கம்மாவோட பர்த்டே ஜனவரி 30-ம் தேதி. என்னோட பர்த்டே ஜனவரி 28. என் அக்கா பொண்ணுக்கு ஜனவரி 25. அக்கா பையன் ஜனவரி 27. ஸோ க்யூட்ல. அதனால ஒவ்வொரு வருஷமும் எங்க நாலு பேர் பிறந்த நாளையும் காமனா ஒருநாள்ல பெரிய பெரிய கேக் வாங்கி கட் பண்ணி கிராண்டா செலிபிரேட் பண்ணுவோம். அந்த நாள்தான் எங்க வீட்டுல இருக்கிறவங்களுக்கு தீபாவளி. எனக்கு மறக்க முடியாத நாள். அந்த ஒரு நாளுக்காக வருஷம் முழுவதும் வெயிட் பண்ணிட்டே இருப்பேன்" என்கிற மியாவின் பெஸ்ட் கியூட்டி சிஞ்சு. அவர் வளர்க்கும் பூனைக்குட்டியின் பெயர்". பாவனா சம்பவத்தைப் பற்றி பேச்செடுத்தாலே டென்ஷன் ஆகிறார் மியா.

''பாவனா சம்பவத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியானேன். இப்பலாம், ஷூட்டிங் கிளம்பி வீட்டுக்கு வர்ற வரைக்கும் உள்ள ஒரு பயம் இருந்துட்டே இருக்குது. பெண்கள் குழந்தைகள்னு யாரையும் விடுறதில்லை சமூகம். நைட் ஆனாவே உடனே வீட்டுக்கு வந்துசேர வேண்டிய நிலைக்குத் தள்ளுது. நடிகையா நாங்க எல்லோரும் பல மொழி படங்கள்ல நடிச்சு, மக்களை மகிழ்விக்கிறோம். ஆண்கள்னா இப்படி ஒரு பயம் கலந்த சூழல் இருந்தா நாங்க எப்படி கிரியேட்டிவா நடிக்க முடியும்?

பெண்கள் மீது பாலியல் சீண்டல்களை தொடுக்குற ஆண்களுக்கு, ஒரு நிமிஷம் சம்பவ இடத்துல இருக்குற பெண்ணை தன் தங்கை, அம்மா, குழந்தையா நினைச்சுப் பார்க்க மனசு வராதா. அப்படி அவங்க குடும்பத்துல ஒரு பெண்ணுக்கு அதே மாதிரியான சம்பவங்கள் நிகழ்ந்தா அதை சாதாரண விஷயமா நினைச்சுக்குவாங்களா? தப்பு யார் செஞ்சாலும் உடனே அவங்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கணும். அந்த தண்டனை, இனி அடுத்து யாரும் தப்பே செய்யாத அளவுக்கு ஒரு பாடமா இருக்கணும். மீண்டும் சினிமாவுல நடிக்க ஆரம்பிச்சு இருக்குற பாவனாவுக்கு என்னோட வாழ்த்துகள்". என்றார்.

- கு.ஆனந்தராஜ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close