Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடும்ப அரசியலை இப்படி சமாளிக்கலாம் தோழிகளே!

குடும்ப அரசியல்


’நாட்டுல  நடக்கிற அரசியல் இருக்கட்டும்...வீட்டுல நடக்கிற பஞ்சாயத்தை யாரு தட்டிகேக்கிறது’ என நம் எல்லாருக்குமே சில சமயம் தோன்றும். ”கல்யாணமானதுல இருந்து உங்க அம்மாவுக்கு என்னை பத்தி குறை சொல்றதே வேலை;  “அது என்ன? உங்க அக்கா என் வீட்டு ஃபங்ஷனுக்கு மட்டும் வரமாட்டிங்கிறாங்க”; ”நீங்க எங்க அப்பா வீட்டுக்கு வரமாட்டீங்க; நான் மட்டும் உங்க அம்மாவை பார்க்க ஊருக்கு வரணுமா?” 


-   இப்படி நிறைய நிறைய மனகுமுறல்கள் இருக்கும். சிலவற்றை  வெளிப்படுத்துவீர்கள்,  சிலவற்றை கல்பனா சூர்யகுமார்“எதுக்கு  சண்டை?” என மனதிலேயே வைத்து வெறுமையை உருவாக்குவீர்கள். இதுபோன்ற சின்ன சின்ன குடும்ப சண்டைகளுக்கும் சிக்கல்களுக்கு பின்னால் இருப்பதும் அரசியல்தான்! இவற்றையெல்லாம் எளிதாக கையாள சில வழிகளை கூறுகிறார் சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள மனாஸ்  ஆலோசனை மையத்தை நடத்திவரும் மனநல ஆலோசகர் (Counseling  Psychologist) கல்பனா சூர்யாகுமார்.


''குடும்ப  அரசியல் என்பது  பல பரிமாணங்கள் கொண்டவை. அதுவும், இப்போதுள்ள பெண்களுக்கு  இருக்கும் நெருக்கடிகள், கடந்த தலைமுறையைவிட மாறுபட்டவை. இன்று பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள்; வீட்டை பராமரிக்கிறார்கள்; குழந்தைகளை பார்த்துக்கொள்கிறார்கள்;  ஒருவேளை, கூட்டுக்குடும்பமாக இருந்தால், மாமியார், மாமனார் ஆகியோரையும் கவனித்துக்கொள்ளவேண்டிய நிலை. இத்தகைய சூழ்நிலையை  சரியாக கையாளமுடியாமல் என்னிடம் ஆலோசனை கேட்க  வரும் பெண்கள் கூறும் பரவலான குறை.. “நான் என் அம்மா வீட்டில் இருந்தால், வேலைக்கு சென்று வீட்டு திரும்பும்போது, சூடான ஒரு காபியாவது போட்டுக்கொடுப்பார்; ஆனால், திருமணம் ஆனதில் இருந்து, மாமியார் என் வீட்டில் இருந்தாலும், நான் வீட்டுக்கு வந்துதான் பாலையே காய்ச்சவேண்டும்;  எவ்வளவு எரிச்சலாக வரும், மேடம்”, என்று புலம்புவார்கள்.

பொதுவாக, இந்த சூழ்நிலைகளை  கையாள.. 


பெண்கள் தங்கள் தாய்வீட்டில், செல்லமாகவோ அல்லது  வீட்டுவேலை  செய்யாமலோ வளர்ந்திருப்பார்கள்.  அதே சூழலை, புகுந்த வீட்டிலும் முற்றிலும் எதிர்பார்க்க முடியாது என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும். ஆணும் பெண்ணும் காதல் திருமணமே செய்திருந்தாலும்,  கணவன் - மனைவியாக சேர்ந்து வாழும்போது நிச்சயம் சின்ன சின்ன சண்டைகள் வரும். அப்போது, பெண்கள் தன் வீட்டில் நடக்கும் எல்லாவற்றையும் தங்களின் அம்மாவிடமோ அல்லது அப்பாவிடமோ  சொல்லி புலம்புவார்கள். ஆனால், இதுபோன்று அன்றாடம் நடக்கும் விஷயங்களையெல்லாம், அடிக்கடி  தாய்வீட்டில் கூறவது  நல்லதல்ல. இதனால், சின்ன சண்டை தேவையில்லாமல்  பூதாகரமாக  வெடிக்கவாய்ப்புண்டு. ஒரு சண்டையால் ஏற்படும் விளைவுகளை விட,  அதனை சம்பந்தமில்லாதவர்களிடம் கூறும்போது ஏற்படும் பாதிப்புகளே அதிகம்  என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

 
ஒரு குழந்தை பள்ளிக்கு செல்கிறது; வீட்டிலேயே வளரும் குழந்தை, புதிதாக இருக்கும் பள்ளி சூழல் பிடிக்காமல்  அழும்;  ‘போக மாட்டேன் என  கோபப்டும்’...ஆனால், காலப்போக்கில் அந்த சூழல் அதற்கு பிடித்துப்போய்விடும். இதே மனநிலைதான், புகுந்த வீட்டிற்கு புதிதாக செல்லும் பெண்ணுக்கு  இருக்கும். இந்த புதிய மாற்றத்தை, அவர்களே உணர்ந்து, தன் கணவர் வீட்டாரின் குடும்பத்துடன் பழக தயாராகுங்கள். 
 

- ஷோபனா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close