Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வைரலாகும் செக்‌ஸுவல் அப்யூஸுக்கு எதிரான 'இவள் அழகு' குறும்படம்!

இவள் அழகு

''நடிகர் சூர்யாவின் 2-D என்டர்டெயின்மெண்ட் உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் சேர்ந்து நடத்தும் குறும்படப் போட்டியில் என் டைரக்‌ஷனில் உருவான 'இவள் அழகு' படம், ஃபைனல் ரவுண்டுக்கு செலக்ட் ஆகியிருக்கு. பெண்களின் பெரும் பிரச்னையான பாலியல் ரீதியான சீண்டல்களை எதிர்த்துப் பயணிக்கும் இந்தப் படம், போட்டியில் கலந்துகிட்ட மற்ற படங்களைவிட, அதிக அளவுக்கு யூடியூப்ல மூணு லட்சம் பார்வையாளர்களைக் கடந்து பார்க்கப்படுது'' என உற்சாகமாகப் பேசுகிறார் வளர்ந்துவரும் குறும்பட இயக்குநர் விஜய் கணபதி. 

"கடந்த மூணு வருஷமா குறும்பட இயக்குநராக நான்கு படங்களை எடித்திருக்கேன். இந்தப் போட்டியைப் பத்தி கேள்விப்பட்டதும் என் மனசுல ரொம்ப நாளா நினைச்சுட்டு இருந்த இந்தக் கதையைப் படமாக்கணும்னு முடிவுசெஞ்சேன். படிக்கும் இடம், வேலை செய்கிற இடம், வசிக்கும் இடம்னு போகிற எல்லா இடங்களிலும் இன்னைக்கு பெண்கள் பல்வேறு வகையிலும் மோசமான ஆண்களால் பாதிக்கப்படுறாங்க. பாலியல் ரீதியான துன்புறுத்தல், ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டறதுனு ரொம்பவே பாதிக்கப்படுறாங்க. இது மாதிரியான பிரச்னையால் பாதிக்கப்படும் பெரும்பாலான பெண்கள், அந்த ஆண்களுக்கு ஈடுகொடுக்க முடியாம கூனிக் குறுகிடுறாங்க. பயம், வழிகாட்ட ஆள் இல்லாதது, தன்னைச் சார்ந்தவங்களின் வற்புறுத்தல்னு அதுக்குப் பல காரணங்கள் இருக்கு. பெண்கள் இப்படி விலகிப்போறதுதான் ஆண்கள் தொடர்ந்து தப்பு செய்ய காரணமா இருக்கு'' என வருத்தப்படும் விஜய், தனது படம் குறித்துச் சொல்கிறார். 

இவள் அழகு

''மதுங்கிற பெண், தான் வேலை பார்க்கும் இடத்துல சக ஊழியரால் ஆபாசமா வீடியோ எடுக்கப்பட்டு, சோஷியல் மீடியாவில் அந்தப் படம் அப்லோடு ஆகுது. அதைப் பார்த்து முதல்ல மனம் உடைஞ்சுப் போனாலும், ஐந்தே நாளில் அந்தப் பிரச்னையில இருந்து மீண்டு அதே ஆபிஸ்க்கு வேலைக்கு வர்றாங்க. மதுவோடு வேலை செய்யும் தோழிகளே, வியந்து பாராட்டும் அளவுக்கு மதுவின் நடவடிக்கையும் வேலை சுறுசுறுப்பும் இருக்கு. குறிப்பாக, அந்த வீடியோவை ஒரே வாரத்துல சோஷியல் மீடியாவுல இருந்து டெலிட் செஞ்சு, மதுவை சந்தோஷப்படுத்துறதோட, 'அந்தப் படத்தை டெலிட் செய்ய தெரிஞ்சுக்கிட்ட நான் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர்னு சொல்லிக்க பெருமைப்படுறேன்'னு சொல்றான் மதுவோட பாய் ஃப்ரெண்ட்'' என்கிற விஜய் முகத்தில் பெருமிதம். 

இயக்குநர் விஜய் கணபதிஇந்தப் போட்டியில் கொடுக்கப்பட்ட மூன்று நிமிடங்களில் பிரதான பிரச்னையை எதிர்த்து பெண்கள் செயல்படவும், இதுபோன்ற பிரச்னைகள் வீரியம் பெறாமல் எளிதாக சரிசெய்ய முடியும் என்பதையும் நறுக்கென சொல்லியிருக்கிறார் குறும்பட இயக்குநர் விஜய். 

''இந்தக் கதையைப் பல நடிகைகளிடம் சொன்ன போது, அவங்க தயங்குனாங்க.  அதுக்குஅப்புறம், தொகுப்பாளினி நட்சத்திராகிட்டே சொன்னோம். அவங்களுக்குக் கதை பிடிச்சுப்போக உடனே ஓ.கே சொல்லிட்டாங்க. இந்தப் படம் எங்க டீமுக்கு பெரிய பூஸ்டா இருந்துச்சு. இந்தப் படத்தைப் பார்க்கறப்போ, சக பெண்களை சகோதரி மாதிரி பார்க்கணும்னு பசங்களுக்கு உணர்த்தும். இது மாதிரியான பிரச்னை ஏற்படாமல் தற்காத்துக்கவும், ஒருவேளை பிரச்னை ஏற்பட்டால் மீண்டு வருவதற்கு எப்படி செயல்படணும் என்கிற உத்வேகத்தையும் பெண்களுக்கு ஏற்படுத்தும்னு நம்பறேன். இந்த கருத்தையே படத்தைப் பார்த்த பல பெண்கள் சொன்னதும் நிறைவைக் கொடுத்திருக்கு. இந்தக் குறும்படப் போட்டியின் முதல் ரவுண்டில், ஐநூறுக்கும் அதிகமான படங்கள் பங்கேற்றுள்ளன. அதிலிருந்து 15 படங்கள் முன்னேறி, இப்போது ஐந்து படங்களை இறுதிச் சுற்றுக்கு தேர்வுசெய்திருக்கிறார்கள். 

ஃபைனல்ல செலக்ட் ஆகும் மூணு படங்களுக்கு பரிசுத்தொகையும், நடிகர் சூர்யாவின் 2-D நிறுவனம் தயாரிக்கும் சினிமா படத்துக்கு கதை சொல்லும் வாய்ப்பும் கிடைக்கும். அதன் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகலாம். எங்க கூட்டு முயற்சியில் உருவான இந்தப் படத்துக்கு முதல் பரிசும், சூர்யாவின் தயாரிப்பில் படம் செய்யும் வாய்ப்பும் கிடைச்சா, அந்தப் படமும் நிச்சயமா பெண்களை மையப்படுத்தின படமாகத்தான் இருக்கும்" என்கிறார் விஜய். 

வெற்றிபெற வாழ்த்துகள் விஜய்! 

- கு.ஆனந்தராஜ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close