Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனிமையை இப்படியும் வெல்லலாம் இல்லத்தரசிகளே!

இல்லத்தரசி

 

 

ல்லத்தரசி பதவி அவ்வளவு சாதாரணமானதில்லை. அதிகாலை கண் விழித்து பரபரப்பில் மூழ்கி சமையல் அறையில் பிசாசு மாதிரி வேலை பார்க்கவேண்டும். 10 மணிக்கு ஆள் அரவமற்ற வீட்டில் தனிமையைச் சுமக்கவேண்டும். மாலை நான்கு மணிக்கு பள்ளியில் இருந்து குழந்தைகள் திரும்பிய உடன்  மறுபடியும் ஜெட் வேகத்தில் பணிகளை முடிக்கவேண்டும். பண மதிப்பு இல்லாத இல்லத்தரசிகள் செய்யும் வேலையின் வலியோ யாருக்குமே புரிவதில்லை. இத்தனை வேலைகளையும் முடித்து விட்டு நிதிச் சிக்கலில் கணவர் தவிக்கும் போது தன்னால் சம்பாதித்து கொடுக்க முடியவில்லையே என்ற கண்ணீர் நதி ஒன்று மனதுக்குள் ஓடும். இப்படி தன்னைப் பற்றியே தாழ்வாக சிந்திக்கும் அவர்களை தனிமை, மனநோயாளியாக மாற்றி விடுகிற அபாயமும் இருக்கிறது. நாம் சந்திக்கும் இல்லத்தரசிகளில் பெரும்பான்மையோர்  தனிமையின் மன அழுத்தத்துக்கு ஆளாகியிருப்பதைக் கண்கூடாக பார்க்க முடிகிறது.

 
பட்டித் தொட்டியெல்லாம் தனிமையில் தவிக்கும் பெண்களைத் தேடிப் பிடித்து வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கிறார் சேலத்தைச் சேர்ந்த கர்லின் மேரி. மத்திய,இல்லத்தரசி கர்லின் மேரி மாநில அரசுகளின் பயிற்சித் திட்டங்களை கடைக்கோடி கிராமப்  பெண்களுக்கும் கிடைக்கும்படி செய்கிறார். இல்லத்தரசிகள் தங்களது தனிமையை வெல்ல என்ன செய்யலாம் என கர்லின்மேரி கேட்டபோது, 
* திருமணத்துக்கு முன்பு குறைவாகப் படித்த பெண்கள் இல்லத்தரசி பதவியை விட வேறு எந்த வாய்ப்பும் தனக்கில்லை என்று நினைக்கின்றனர். இவர்களுக்காகவே அரசு சார்பில் உதவித் தொகையுடன் வேலை வாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சிகளுக்கு பெண்கள் நேரத்தை மட்டும் செலவளித்தால் போதும். கட்டணம் கட்டத் தேவையில்லை. 
* பட்டப்படிப்பு முடித்த மனைவியைக் கூட வேலைக்கு அனுப்ப ஒரு சில கணவர்களுக்கு விருப்பம் இருக்காது. இதனால் இல்லத்தரசிகளாக மட்டும் வலம் வரும் பலருக்குள்ளும் வேலைக்குச் செல்லவேண்டும் என்ற ஏக்கம் இருக்கும்.  அது முடியாமல் போகவே, நாளடைவில் அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும். இவர்கள் இரண்டரை மாத கணினிப் பயிற்சி முடித்தால் போதும் வீட்டில் இருந்த படியே வாய்ஸ் மற்றும் நான் வாய்ஸ் பி.பி.ஓ. பயிற்சிகளை முடித்து விடலாம். பிறகு, வீட்டில் இருந்த படியே டேட்டா என்ட்ரி பணிகளை லேப்டாப்பில் தொடரலாம். 
* வீட்டுச் செலவுகளைக் குறைக்கவும், மகிழ்ச்சியான பொழுது போக்குக்கும் வீட்டுத் தோட்டம் போடுவது கை கொடுக்கும். இதற்கும் இன்றைக்கு குறுகிய கால பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இயற்கை ஆர்வலர்கள் பண்ணைக்குச் சென்று இலவசமாக கற்றுக் கொள்ளலாம். வீட்டில் உடைந்த பிளாஸ்டிக் டப்பா மற்றும் வேஸ்ட் பொருட்களைக் கொண்டே மதிப்பு மிக்க தோட்டத்தை இருக்கும் இடங்களில் உருவாக்க முடியும். தனிமையை இனிமையாக கடப்பதோடு ஆரோக்கியமான காய்கறிகளும் கிடைக்கும். 
* இல்லத்தரசிகள் தங்களது உடல்  மற்றும் மன நலனில் சிறிதும் அக்கரை செலுத்துவதில்லை. மீந்ததை சாப்பிட்டு, இருப்பதை உடுத்தி என்பது மாதிரியான சிக்கன வாழ்க்கை வாழ்கின்றனர். இப்படி வாழத் தேவையில்லை. தனிமை தின்னும் நேரத்தை தனக்கானதாக மாற்றிக்கொள்ளலாம். சின்னச் சின்ன உடற் பயிற்சிகள், அழகு பராமரிப்புக்கான ட்ரீட்மெண்ட், யோகா என உடலையும், உள்ளத்தையும் மிளிரச் செய்ய இந்த நேரத்தை பயன்படுத்தலாம். 
* ஆன்லைனில் அரட்டை அடிப்பதை சிலர் தனிமையைப் போக்கும் வழியாக நம்புகின்றனர். பேஸ்புக்கில் வம்பிழுப்பது. செல்போனில் வாயாடுவது மற்றும் வாட்ஸ் ஆப்பில் வெட்டி அரட்டை அடிப்பது , தொலைக்காட்சித் தொடர்களில் மூழ்குவது இவற்றால் எந்தப் பயனும் பெண்களுக்கு இல்லை. இந்த மீடியாக்களைக் கற்றுக் கொள்ளவும், பிசினஸ்க்கான தளமாகவும் மாற்றிக் கொண்டால் தனிமையைப் போக்கிக் கொள்வதோடு பணம் சம்பாதித்த பெருமிதமும் கிடைக்கும். வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் வழியாக சேலை விற்பனை, இயற்கை வேளாண் பொருள் விற்பனை, வீட்டுத் தோட்ட காய்கறி விற்பனை என கல்லாக்கட்டலாம். 
* அடிப்படை தையல் மட்டும் கற்று வைத்திருக்கும் பெண்கள் கூடுதலாக ஆரி வொர்க் மற்றும் எம்ராய்டரி பயிற்சி பெறலாம். இந்தப் பயிற்சியை அருகில் வசிக்கும் பெண்களுடன் இணைந்து கற்றுக் கொண்டால் உங்களால் ஒரு பிசினஸ் கம்யூனிட்டியை உருவாக்க முடியும். பிரைடல் பிளவுஸ் தைக்கக் கற்றுக் கொண்டால் மாதம் 10ஆயிரம் வரை எளிதில் சம்பாதிக்கலாம். தனிமையை கற்பதற்கான நேரமாக மாற்றிக் கொள்ளுங்கள். அடுத்தடுத்து உங்களது முயற்சிகள் சிகரம் ஏற்றும். 
 

-யாழ் ஸ்ரீதேவி 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close