பெண்கள் வாய்வழிச் சுகாதாரம்! (sponsored content) | Dental Awareness for Women!

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (07/03/2017)

கடைசி தொடர்பு:18:18 (08/03/2017)

பெண்கள் வாய்வழிச் சுகாதாரம்! (sponsored content)

பெண்கள் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு வகையான ஹார்மோன் மாற்றங்களுக்கு உள்ளாகின்றனர். அவற்றை பூப்படைதல், தாய்மையடைதல், மாதவிடாய் பருவம் என்று வகைப்படுத்தலாம்.

பூப்படைதல் நிலை

பெண்கள் 8-14 வயதுக்குள் பூப்படைகின்றனர். இச்சமயத்தில் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக அவர்களுக்கு ஈறுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் ரத்தக்கசிவு பொதுவாக எல்லோருக்கும் நிகழக்கூடியதுதான் என்றபோதும், அவர்கள் அந்த சமயத்தில் பற்கள் மீது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அருகில் உள்ள பல் மருத்துவரை அணுகி, பற்கள் பாதுகாப்புக்குப் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் ஈறுகள் தொடர்பான நோய்கள் எதுவும் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

கருவுற்றிருக்கும் நிலை

பெண்கள் கருவுற்றிருக்கும் போதும் ஹார்மோன் ஏற்றதாழ்வுகள் ஏற்படுகிறது. மேலும் இந்த சமயத்தில் பற்கள் பராமரிப்பைப் பற்றி அவ்வளவாக  கவலைப்படுவதில்லை. காலையில் ஏற்படும் மசக்கை காரணமாக பல் தேய்ப்பதைத் தவிர்த்துவிடுகிறார்கள். இதனால் பற்சொத்தை மற்றும் ஈறுகள் வீக்கம் போன்ற ஈறுகள் தொடர்பான பிரச்னைகள் உருவாகின்றன. கருவுற்றிருக்கும்போது அடிக்கடி வாந்தி எடுப்பதால் ‘அமில வாய்வழிச் சூழல்’ ஏற்படுகிறது. இது பாக்டீரியாவின் வளர்ச்சிக்கும் அதன்மூலம் பல் மற்றும் ஈறுகள் தொடர்பான பிரச்னைகளுக்கும் காரணமாக அமைகிறது.

இந்தப் பிரச்னைகள் குணப்படுத்தக் கூடியவையே! மேலும் பற்கள் சுகாதார வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுவதன் மூலம் இவை வராமலும் தடுக்கலாம். உங்களுக்கு ஓரளவுக்கு அல்லது அதிகமான ஈறுகள் தொடர்பான பிரச்னைகள் இருக்கிறது என்றால், அது குறைமாதப் பிரசவம் அல்லது எடை குறைந்த குழந்தைகளைப் பெற்றேடுப்பதற்கான சாத்தியம் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. இந்தக் கர்ப்ப காலத்தில், உணவின் மீது கொள்ளும் விருப்பத்தால், அதிக அளவு உணவை உட்கொள்ளத் தோன்றும். இதனால் ஈறுகளைச் சுற்றிப் படலம் உருவாகிறது. அது பற்சொத்தை மற்றும் ஈறுகள் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

மாதவிடாய் நிலை

உங்கள் எலும்புகளை உறுதியாக வைக்க உதவுவது கால்சியம் என்ற தாது. இதுதான் உங்கள் பற்களின் ஆரோக்கியத்துக்கும் காரணமாக இருக்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்புகளை வலுவிழக்கச் செய்து எலும்பு முறிவுக்கு வழிவகுக்கும் ஒரு நோய்) பொதுவாக மாதவிடாய்ப் பருவத்தில் உள்ள பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. இதனால் தாடைப் பகுதியில் உள்ள பற்களைப் பாதுகாக்கும் எலும்புகளை வலுவிழக்கச் செய்கிறது. இதனால் பற்கள் ஆடுவதும், சில சமயங்களில் விழவும் காரணமாக அமைகிறது. ஆரோக்கியமான எலும்புகளைக் கொண்ட பெண்களைவிட, இந்த ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பெண்கள், மூன்று மடங்கு அதிகமாக பற்கள் இழப்புக்கு உள்ளாகின்றனர். குறைந்த அளவு கால்சியம் பற்சிதைவை அதிகப்படுத்துகிறது. 

அன்றாடம் 1200 மி.கி கால்சியம் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பால், தயிர், பாலாடைக்கட்டி, பச்சைக் காய்கறிகள், கீரைகள் போன்றவற்றில் கால்சியம் அதிகம் இருக்கின்றது. வயது அதிகமாகும்போது உங்கள் எலும்புகளின் வலிமை குறைகிறது. ஆனால் கால்சியம் நிறைந்த உணவை எடுத்துக் கொள்வதால் இந்த பாதிப்பைக் குறைக்கலாம். 

இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்