Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'என் சிறுநீர் பையை பசங்க மாத்துறப்ப.... மனசு பதறும்!’’ - கேன்சரோடு போராடும் தன்னம்பிக்கை மனுஷி சிகப்பி

சிகப்பி

பெரிய நோயினாலோ, விபத்தினாலோ பாதிக்கப்பட்ட பலரும் 'இனி நம்மால் மற்றவர்களுக்குப் பயனில்லை' என்று முடங்கிப் போய்விடுவார்கள். அல்லது அதிலிருந்து வெளியே வருவதற்குப் பலகாலம் எடுத்துக்கொள்வார்கள். இதில் ஒரு சிலர் மட்டும் அசாத்திய தன்னம்பிக்கையுடன் வலம் வந்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக நிற்பார்கள். அப்படிப்பட்டவர்தான் சிகப்பி அருணாச்சலம். 

''இருபது வருஷத்துக்கு முந்தைய காலம்... ஸ்கூல் போயிட்டு இருந்த எனக்குக் கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க. திடீர்னு வந்த குடும்பப் பொறுப்பை சுமக்க முடியாம திணறினேன். நிறையக் கஷ்டங்களை அனுபவிச்சேன். என்னோட கணவர் அருணாச்சலம்தான் 'போய் கம்ப்யூட்டர் கத்துக்கோ'னு என்னைப் படிக்க அனுப்பினார். அதுகப்புறம்தான் வெளியுலகம்னா என்னனு தெரிய ஆரம்பிச்சது. ஒரு பொண்ணும், பையனும் பொறந்தாங்க. குடும்பவாழ்க்கை பிஸியா போய்ட்டு இருந்தது. எப்பவும் ஸ்கூட்டியில சர்சர்னு சுத்திட்டே இருக்கிற பிஸியான குடும்பத்தலைவி ஆனேன். திடீர்னு முதுகுல ஒரு வலி ஆரம்பிச்சது. சாதாரண வலினு நினைச்ச எனக்குத் தாங்க முடியாம போகவும் ஹாஸ்பிடலுக்கு போனேன். டாக்டரும் சாதாரண வலிதானு சொல்லி மருந்து மாத்திரை கொடுத்தனுப்பிட்டார். பிரச்னை அப்பவும் தீரலை. முதுகு வலி இன்னும் பொறுக்க முடியாத அளவுக்கு அதிகமாச்சு. என் ஃப்ரெண்டு சொன்ன மருத்துவமனைக்குப் போனப்ப, முதுகுல நெல்லிக்காய் அளவுக்கு கேன்சர் கட்டி இருக்குது. உடனே அதை அகற்றனும்னு சொன்னாங்க. என்னால அந்த அதிர்ச்சியை தாங்கிக்கவே முடியலை. குடும்பத்தோட ஒட்டுமொத்த சந்தோஷமும் போச்சு" என்றவருக்கு 2011-ம் ஆண்டு கேன்சர் கட்டி அகற்றப்பட்டு முதுகில் பிளேட்டு வைத்திருக்கிறார்கள். 

''வருஷத்துல 365 நாளும் முதுகுல வலி இருந்துட்டே இருக்கும். ரொம்ப நேரம் உட்கார... நிக்க முடியாது. இடுப்புக்குக் கீழ உணர்ச்சியே இருக்காது. எப்ப மோஷன், யூரின் போகும்னு கூடத்தெரியாது. அந்த அளவுக்கு உடல் என் கட்டுப்பாட்டை மீற ஆரம்பிச்சது. என் பையனும், பொண்ணும் என் யூரின் பேக்கை மாத்துறப்ப மனசு பதறும். ஆனா மனச கல்லாக்கிகிட்டு இதெல்லாம் கடந்துதான் வரணும்னு மனச தேத்திப்பேன். என் நினைப்பைத் திசைதிருப்ப புத்தகம் படிக்க ஆரம்பிச்சேன். ஓவியம் வரைஞ்சேன். 'ஏம்மா உங்களை இவளோ கஷ்டப்படுத்துகிறீங்க. நாங்க உங்களை நல்லாதானே பாத்துகிடுறோம்' னு பசங்க கேப்பாங்க. 'இல்லப்பா நான் வரையுறதை நிறையப் பேர் வாங்கிட்டு போறப்ப தன்னம்பிக்கை வருது"னு என் பசங்களுக்கு புரியவைச்சேன். குப்புறப்படுத்துட்டு வரையுறப்ப கையோட முட்டி ரெண்டும் புண்ணாகிடும். அதப் பொருட்படுத்தாம எனக்குப் பிடிச்சதைத் தொடர ஆரம்பிச்சேன். நிறையப் பேர் என் படங்களை வாங்கிட்டு போறாங்க'' என்று சிலிர்ப்பவரின் பூஜை அறையில் அவர் வரைந்த கடவுள்... சிகப்பி சொல்வதை அமைதியாக கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். 

சிகப்பி


''இத்தனை கஷ்டத்துக்கு இடையிலேயும் நகர்ந்து போயாவது சமைச்சிடுவேன். என்னை நம்பி குடும்பம் இருக்குதே. அத்தனை ஈஸியா விட்ற முடியுமா? முடிஞ்ச அளவுக்கு சின்னச்சின்ன வீட்டு வேலைகள் பார்ப்பேன். என் பொண்ணு சீதாலெட்சுமிக்கு கல்யாணம் பண்ணிக்கொடுத்து பேரப்பிள்ளையை கொஞ்சிட்டு இருக்கிற வாழ்க்கையைக் கடவுள் கொடுத்திருக்கார்.  இப்போ பேரப்புள்ளையைக் கொஞ்சிட்டு இருக்கேன். கேன்சர் வந்தபிறகுதான் உறவுகளைப் புரிஞ்சுக்க முடிஞ்சது. எல்லாம் நல்லதுக்குதான். நமக்குக் கடவுள் மனக்கண்ணைத் திறக்க உதவி பண்றது இப்படியான தருணத்துலதான் இல்லையா..கொஞ்சம் கொஞ்சமா நடமாட பழகிட்டு இருக்கிற குழந்தை மாதிரியா ஆகிட்ட நான் என் ஓவியக் குழந்தைகளை உயரம் பறக்கவிட்டிருக்கேன்ங்கிறது மனசுக்கு ஆனந்தமா இருக்குது. இதவிடவேற என்ன வேணும். வலிகளை கடந்து வருவேன்''என்கிறார் இந்த 45 வயது தன்னபிக்கை மனுஷி. 

- வே.கிருஷ்ணவேணி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close