Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“பள்ளிப்படிப்பை விட்டவர்களும் கை நிறைய சம்பாதிக்கலாம்!” - இலவச அனிமேஷன் வகுப்பு நடத்தும் ஐஸ்வர்யா

அனிமேஷன்

துரை கே.கே. நகர் பகுதியில் ‘அனிமேஷன் ஐஸ்வர்யா வீடு எங்கு இருக்கிறது?’ எனக் கேட்டால் எளிதாக அடையாளம் காட்டிவிடுவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏழைக் குழந்தைகள், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு இலவசமாக அனிமேஷன் வகுப்புகள் நடத்தி வழிகாட்டி வருகிறார் ஐஸ்வர்யா. ''படிப்பில் ஆவரேஜாக இருக்கிறவங்களும் சாதிக்க நிறையத் துறைகள் இருக்கு. அப்படி எனக்குத் தெரிந்த துறையான அனிமேஷனில் மத்தவங்களுக்கும் வழிகாட்ட என்னால் என்ன முடியுமோ அதைச் செய்றேன்'' என்று பளீர் புன்னகையுடன் அறிமுகமாகிறார் ஐஸ்வர்யா. 
    
அனிமேஷன்''நான் படிச்சது, வளர்ந்தது எல்லாம் மதுரைதான். சின்ன வயசுல இருந்தே நாம மத்தவங்களுக்கு பிரயோஜனமான வாழ்க்கை வாழணும்னு நினைப்பேன். ஸ்கூல்ல படிச்சப்போ ஒவ்வொரு கல்வியாண்டு முடியும்போதும் என்னோட புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், ஆடைகளையெல்லாம் ஏழைக் குழந்தைகளுக்கு கொடுக்குற பழக்கம் இருந்தது. பி.எஸ்சி., அனிமேஷன் முடிச்சதும், கொஞ்ச நாள் ஒரு ஃபேஷன் இன்ஸ்டிட்யூட்டில் வேலைபார்த்தேன்'' என்றவர், தன் சிந்தனையை மாற்றிய தருணங்களைப் பற்றி பகிரத் தொடங்கினார்.

''அந்தச் சமயங்களில் சின்னப் பசங்க, பொண்ணுங்க படிப்பை பாதியில விட்டதால ரொம்பக் குறைவான சம்பளத்துல வேலை பார்த்துட்டு இருக்கிறதை பார்க்கும்போதெல்லாம், அவங்ககிட்ட 'ஏன் தொடர்ந்து படிக்கலை?'ன்னு கேட்பேன். 'படிப்பு வரல', 'வறுமை'னு பல காரணங்களைச் சொன்ன அவங்கள்ல பலருக்கும் இருந்த கற்பனைத் திறனையும், சரியான வழிகாட்டுதல் இருந்தா அவங்க சிறப்பா செயல்படுவாங்க என்பதையும் உணர்ந்தேன்.

இவங்களுக்கு என்ன செய்யலாம்னு அக்கறையோட யோசிச்சப்போ, 'உதவுறதுக்கு பணம், பொருள் அவசியமில்லை. உதவணும் என்ற எண்ணமே போதும்' என்ற வாசகம்தான் ஞாபகம் வந்தது. பள்ளிப்படிப்பை பாதியில விட்ட பசங்ககிட்ட பேசி, அவங்களோட விருப்பத்தைப் பொறுத்து, டிடிபி, அனிமேஷன், மல்டி மீடியா வகுப்புகளை ரெண்டு மாச காலத்துக்கு அவங்களுக்கு எடுத்தேன். ஆர்வமா கத்துக்கிட்ட அவங்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கித் தந்தேன். இந்தப் பணிகளைத் தொடர்ந்து செய்ய ‘ஞான போதினி’ என்ற அமைப்பை ஆரம்பித்தேன். 

‘ஞான போதினி’யில் எங்கிட்ட அனிமேஷன் கத்துக்கிட்ட பலர் இன்னைக்கு வெற்றியாளர்களா வந்திருக்காங்க, கைநிறையச் சம்பாதிக்கிறாங்க. கத்துக்கிறதுக்கு வயசு ஒரு தடை இல்ல. அதனால எந்த வயசானாலும் ஆர்வமா வர்ற எல்லாருக்கும் அனிமேஷன் கத்துத் தர்றேன். ஏழை மாணவர்களுக்குக் கட்டணம் கட்டி என்னால பள்ளி, கல்லூரிகளில் சேர்த்துவிட முடியாது. ஆனா நானே ஒரு வகுப்பறையா மாறி எனக்குத் தெரிஞ்சதை அவங்களுக்குக் கத்துத் தர முடியும். அதைத்தான் செய்றேன்'' என்றவர், குழந்தைகளுக்குதான் வழங்கும் பயிற்சிகள் பற்றிப் பேசினார். 

''இப்ப இருக்கிற குழந்தைங்க நிறைய அனிமேஷன் படங்கள், டி.வி.சீரியல்கள் பார்க்கிறாங்க. அதெல்லாம் எப்படி உருவாக்கப்படுதுன்னு தெரிஞ்சிக்கிற ஆர்வம் அவங்ககிட்ட அதிகமா இருக்கும். அவங்களோட கிரியேட்டிவிட்டியைத் தூண்டி விடுறதுக்கும், இந்தத் துறை பற்றிய எதிர்கால வாய்ப்புகளை அவங்களுக்கு எடுத்துச் சொல்றதுக்கும் அவங்களுக்கு சம்மர் வகுப்புகள் எடுக்கிறேன். வசதி இருக்கிறவங்ககிட்ட மினிமம் ஃபீஸ் வாங்கறேன். இல்லாத வீட்டுப் பிள்ளைங்களுக்கு இலவசமா சொல்லித் தர்றேன்.. என்னோட கணவரும் ஃபைன் ஆர்ட்ஸ் துறையைச் சேர்ந்தவர் என்பதால, என் முயற்சிகளையும் மனசையும் அவரலா புரிஞ்சுக்க முடியும். சேவையில் சேர்ந்து பயணிக்கிறோம்!"

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close