3 முகவரிகளில், 21 பெயர்களில் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் வசித்துவருகிறார் - பிரிட்டன் நிதி அமைச்சகம்!

தாவூத் இப்ராஹிம்

ந்தியாவால் தேடப்படும் மிக முக்கிய பயங்கரவாதியான தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் 3 முகவரிகளில் 21 பெயர்களில் செயல்பட்டுவருகிறார் என பிரிட்டன் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1993-ம் ஆண்டு, இந்தியாவையே உலுக்கிய மும்பை தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இந்தத் தொடர் குண்டுவெடிப்பில் 260 பேர் கொல்லப்பட்டனர். 700-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தத் தொடர் குண்டுவெடிப்புக்குக் காரணமான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை இந்திய அரசு தீவிரமாகத் தேடிவருகிறது. ஆனால், இவர் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளார். இவர், பாகிஸ்தானில் பதுங்கியுள்ளதை பாகிஸ்தான் அரசு இன்று வரை ஒப்புக்கொண்டதே இல்லை. பிரிட்டனின் நிதி அமைச்சகம், நிதி பெறுவதற்குத் தடை செய்யப்பட அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில், இந்தியாவால் தேடப்பட்டுவரும் பயங்கரவாதியான தாவூத் இப்ராஹிம் பற்றிய தகவல்களும் அடங்கியுள்ளன. இந்தத் தகவலின் அடிப்படையில், தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் 3 முகவரிகளில், 21 பெயர்களில் வாழ்ந்துவருகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!