'வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்!'- அதிரடி அறிவிப்பை வெளியிட்டது அமெரிக்கா

வடகொரியா - அமெரிக்கா இடையே, கடந்த பல மாதங்களாகவே மோதல்போக்கு நீடித்துவரும் நிலையில், தற்போது அமைதிக்கான முன்னெடுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கத் தரப்பிலிருந்து, 'சீக்கிரமே வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தற்போது நிலவிவரும் பிரச்னைக்குத் தீர்வு எட்டப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

U.S. Secretary of State rex tillerson

இதுகுறித்து, அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் (Secretary of State), 'கடந்த சில நாள்களாக வடகொரியா தரப்பிலிருந்து எந்தவித அச்சுறுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக கடந்த 5-ம் தேதி, ஐ.நா சபை பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்துக்குப் பிறகு, வடகொரியாவிடமிருந்து எந்த வித அச்சுறுத்தும் நடவடிக்கைகளும் இல்லை. வடகொரியாவின் இந்தப் போக்கு சற்று ஆறுதல் தருகிறது. இதுவே, நாங்கள் வெகு நாள்களாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் சமிக்ஞையாக இருக்கும் என நினைக்கிறேன். சீக்கிரமே வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தற்போது நிலவிவரும் பிரச்னைக்கு தீர்வு எட்டப்படலாம். நாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே இருக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!