Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒருவரைப் போல மற்றொருவர்... குழம்பிய ட்ரம்ப்! கலாய்த்த பெண் நிருபர்

ட்ரம்ப்

மெரிக்க அதிபர் ட்ரம்ப் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது வழக்கமான ஒன்றுதான். சில சமயங்களில் ஜாலியான சர்ச்சைகளிலும் சிக்கிக்கொண்டு சமாளிப்பார். அந்த மாதிரியான சர்ச்சைதான் பின்லாந்திலும் நடந்துள்ளது. அந்த நாட்டு அதிபருடனான கூட்டுப் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப் கலந்துகொண்டார். இதில், அருகருகே இரு பெண் நிருபர்கள் அமர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனர். இங்குதான் ட்ரம்ப் குழம்பி உள்ளார்.

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்புக்கு முன் வெள்ளை மாளிகையில் நடந்த வேறு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், ட்ரம்ப்புக்கு ரஷ்யாவுடனான உறவுகுறித்த கேள்வியை பவுலா வெலின் என்ற நிருபர் கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்துவிட்டு 10 நிமிட இடைவெளியில் இந்தச் சந்திப்புக்கு வந்துள்ளார் ட்ரம்ப்.

அந்த நிருபரும் வேறு ஒரு நிருபருடன் சேர்ந்து இந்தச் சந்திப்புக்கு வந்துள்ளார். இந்தச் சந்திப்பில் பின்லாந்து அதிபர் சவுலி நினிஸ்டோ பேசத் தொடங்கியதும். அமெரிக்க - ரஷ்ய உறவுகுறித்து மற்றொரு பெண் நிருபரிடமிருந்து கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் ட்ரம்ப் உடனடியாகக் குறுக்கிட்டு, ''மறுபடியுமா'' எனக் கேட்க, அதற்குப் பின்லாந்து அதிபர், ''இவர் (அந்த நிருபர்) வேறு. அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருப்பதால் உங்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது'' என விளக்கியுள்ளார்.

வழக்கம்போல ஒரு சிரிப்புடன் சமாளிக்க முயற்சித்தார் ட்ரம்ப். அதற்கு அந்த நிருபர், ''பின்லாந்தில் நிறைய பேர் ஒரே மாதிரியான Blonde (பழுப்பு நிற தலைமுடி) நிறத்தில்தான் இருப்போம். அதனால்தான் உங்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கும்'' எனச் சொல்லி ட்ரம்ப்பை வாயடைக்க வைத்தார். ''Go Ahead'' எனச் சிரித்துக்கொண்டே சந்திப்பைத் தொடர்ந்தார் ட்ரம்ப். 

பின்னர் அந்த நிருபர் ட்ரம்ப்பிடம், ரஷ்யாவுடனான உறவுகுறித்து கேட்கையில், ''பின்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே ரஷ்யாவுடன் நல்லுறவுடன்தான் இருக்கின்றன. இதைத் தொடரவே விரும்புகிறோம். ரஷ்யா அணு ஆயுத நாடு. அதனுடன் நட்பு பாரட்டுவது நல்ல விஷயம்தான். பின்லாந்து மீது ரஷ்யா நிறைய மதிப்பு வைத்துள்ளது. எங்கள் உறவு மேலும் வலுப்பெறும்" என்றார்.

சிறப்பாக நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ட்ரம்பின் குறுக்கீடு இல்லாமல் இருந்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனால், ட்ரம்ப் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்வதில் வல்லவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். 

ட்ரம்பைப் பொதுமேடைகளில் விமர்சிப்பது என்பது தொடர்ந்து வருகிறது. கோல்டன் குளோப் விருதில் மெரில் ஸ்ட்ரீப், ஆஸ்கர் மேடையில் ஜிம்மி கிம்மெல், ஏழு முஸ்லிம் நாடுகளுக்கு தடை விதித்தபோது, சிலிக்கான் வேலியில் உள்ள சி.இ.ஓ-க்கள், பெண்கள் மார்ச்சில் ஒபாமாவின் மகள் என ட்ரம்ப்பை விமர்சிக்கும் செயல்கள் தொடர்ந்து வருகின்றன. ட்ரம்ப்பும் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். தலைவர்களுடனான சந்திப்பில் கை கொடுப்பது தொடங்கி ஒப்பந்தத்தில் கையொப்பமிட பேனாவைத் திறப்பதுவரை சொதப்பும் ட்ரம்ப், இந்த முறை விவாதத்தில் குறுக்கிட்டு மாட்டிக்கொண்டுள்ளார்.

அமெரிக்க அதிபராகப் பதவியேற்பதற்கு முன்பு சர்ச்சைகளில் சிக்கியது பரவாயில்லை. அதிபரான பின்பும் அது தொடர்வதுதான் அமெரிக்கர்களைக் கோபப்படுத்துகிறது. ''மிஸ்டர் ட்ரம்ப்... நீங்கள் ட்விட் செய்வதை விட்டுவிட்டு உங்களைப் பற்றி ட்விட்டரில் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள்'' என்கின்றனர் அமெரிக்க நெட்டிசன்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement