Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கண்டுகொள்ளாத வடகொரியா: கண்டனம் தெரிவிக்கும் அமெரிக்கா!

ஜப்பான் நாட்டைக் கடந்து சென்று தாக்கக்கூடிய ஏவுகணை ஒன்றை நேற்று வடகொரியா சோதித்ததற்கு ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

வடகொரியா

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் தொடர் ஏவுகணைச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டுவருகிறது. முன்னதாக, அமெரிக்காவின் போர் மிரட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம் வட கொரியா ராணுவ அணிவகுப்பு நடத்தியது. புதிய ஏவுகணைகளின் அறிமுகமும் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. தொடர்ச்சியாக, சர்வதேச அளவில் பல நாடுகளின் கண்டனங்களையும் சம்பாதித்து வருகிறது வட கொரியா.

சர்வதேச நாடுகள் மற்றும் ஐநா சபையின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதச் சோதனைகளை நடத்திவருகிறது வட கொரியா. அந்த நாட்டின் மீது, ஐநா சபை பொருளாதாரத் தடை விதித்துள்ளபோதும், அதை வட கொரியா பொருட்படுத்தவேயில்லை. இந்நிலையில், ஜப்பானைக் கடந்து பசிபிக் பெருங்கடலில் நேற்று ஏவுகணைச் சோதனை ஒன்றை வடகொரியா அரங்கேற்றியுள்ளது. ’பசிபிக் பெருங்கடலில் நிகழ்த்தும் முதல் வெற்றிகர ஏவுகணைச் சோதனை. இதுபோல் பல தாக்குதல்கள் பின்னாளில் தொடரும்’ என்று வடகொரியா அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.

வடகொரியாவின் இந்தத் தொடர் அத்துமீறிய செயலால் தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன. இன்றைய சோதனைக்கு ஜப்பான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனங்கள் தெரிவித்துள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement