பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் இன்று தீர்ப்பு?

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெனாசிர் பூட்டோ


பாகிஸ்தான் வரலாற்றிலேயே பெண் அரசியல் தலைவர் என்ற முத்திரையுடன் மக்கள் மனதில் நிலைத்தவர் மறைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ. கலவரமும், தீவிரவாதமும் நாட்டையே பெரிதும் அச்சப்பட வைத்த சூழலில், பெண் என்றும் பாராமல் அரசியல் களத்தில் இறங்கி துணிச்சலுடன் செயல்பட்ட பெனாசீர் பூட்டோ, 2007-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் நாள் படுகொலை செய்யப்பட்டார். 1988-ம் ஆண்டு தன் 35-ம் வயதில்தான் சந்தித்த முதல் பொதுத்தேர்தலிலேயே தன் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற காரணமானார். தானும் பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையுடன், நவீன காலத்தில் ஒரு முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட அரசை தலைமையேற்று நடத்தும் வாய்ப்பையும் பெற்றார். பிரதமாக பொறுப்பேற்ற, 20 மாதங்களிலேயே பதவியை இழந்து, எதிர்க்கட்சித் தலைவரானார். மீண்டும் 1993-ம் ஆண்டு இரண்டாவது முறையாகப் பிரதமராகி மீண்டும்1996-ம் ஆண்டு பதவியை இழந்தார். இந்த இருமுறையும் பெனாசிர் பதவியை இழக்க, அவரது கணவரின் மீதான ஊழல் புகார்களே முக்கியக் காரணம் எனவும் சொல்லப்பட்டது. பின்னர், தனிப்பட காரணங்களினால் 1998-ம் ஆண்டு துபாய்க்குச் சென்று குடியேறினார்.

2007-ம் ஆண்டு மீண்டும் பாகிஸ்தானுக்குத் திரும்பிய பெனாசிர், 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த பொதுத் தேர்தலில், அப்போதைய பிரதான எதிர்க்கட்சியான 'மக்கள் கட்சி'யின் பிரதமர் வேட்பாளராகக் களத்தில் இருந்தார் பெனாசிர். தேர்தலுக்குச் சரியாக இரண்டு வாரக்காலமே இருந்த நிலையில், டிசம்பர் மாதம் ராவல்பிண்டி நகரில், மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார் பெனாசிர்.

இப்படுகொலையில் தொடர்புடையதாக தெஹ்ரீக்-இ-தலிபான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேர் மற்றும் 2 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று ராவல்பிண்டியில் உள்ள தீவிரவாதத் தடுப்பு மையத்தில் இவ்வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!