வலுக்கிறது எதிர்ப்பு: வடகொரியாவுக்கு எதிராகக் கூடியது ஐ.நா சபை! | UN calls for a meeting against North Korea

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (04/09/2017)

கடைசி தொடர்பு:13:45 (04/09/2017)

வலுக்கிறது எதிர்ப்பு: வடகொரியாவுக்கு எதிராகக் கூடியது ஐ.நா சபை!

உலக நாடுகளின் எச்சரிக்கைகளை மீறி ஆறாவது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தி அதைப் பெருமையுடன் பறைசாற்றிய வடகொரியாவுக்கு எதிராக ஐ.நா சபை அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.

ஐ.நா


உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் தொடர் ஏவுகணை மற்றும் அணுகுண்டுச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டுவருகிறது. முன்னதாக, அமெரிக்காவின் போர் மிரட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், வட கொரியாவில் புதிய ஏவுகணைகளின் அறிமுகமும் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இதனால் தொடர்ச்சியாக, சர்வதேச அளவில் பல நாடுகளின் கண்டனங்களையும் சம்பாதித்தது வடகொரியா. 


சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதச் சோதனைகளை நடத்திவரும் வடகொரியா மீது ஐ.நா சபை பொருளாதாரத் தடை விதித்துள்ளபோதும், அதை வடகொரியா பொருட்படுத்தவேயில்லை. இந்நிலையில், ஜப்பானைக் கடந்து பசிபிக் பெருங்கடலில் சமீபத்தில் ஏவுகணைச் சோதனை ஒன்றை வடகொரியா அரங்கேற்றியது. ’பசிபிக் பெருங்கடலில் நிகழ்த்தும் முதல் வெற்றிகர ஏவுகணைச் சோதனை. இதுபோல் பல தாக்குதல்கள் பின்னாளில் தொடரும்’ என்று வடகொரியா அதிகாரபூர்வ அறிக்கையும் வெளியிட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தன. 


இந்நிலையில், தொடர்ந்து போர் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் வடகொரியாவை எச்சரிக்கும் வகையில் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம், தென்கொரியா ஆகிய நாடுகள் இணைந்து பங்கேற்கும் கூட்டத்தை இன்று காலை 10 மணிக்கு ஐ.நா சபை கூட்டியுள்ளது. இதை ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே உறுதி செய்துள்ளார்.
 


[X] Close

[X] Close