Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போர் பதற்றத்தில் உலக நாடுகள்: சீனாவுடன் கைகோத்த ரஷ்யா!

உலக நாடுகளின் எச்சரிக்கைகளை மீறி ஆறாவது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தி அதைப் பெருமையுடன் பறைசாற்றிய வடகொரியாவுக்கு எதிரான வகையில் சீனாவுடன் தற்காலிகமாகக் கைகோத்துள்ளது ரஷ்யா.

ரஷ்யா- சீனா

அமெரிக்கா- வடகொரியா இடையில் பல மாதங்களாகப் பிரச்னை நிலவிவரும் நிலையில், தற்போது இரு தரப்புகளுக்கு இடையிலான மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் வடகொரியா, ஜப்பானின் வான் வழியைத் தாண்டி ஏவுகணைச் சோதனை நடத்தியது பிரச்னையின் வீரியத்தை இன்னும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வடகொரியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீனாவும் ரஷ்யாவும் தற்காலிகமாகக் கூட்டு சேர்வதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ‘பிரிக்ஸ்’ மாநாட்டுக்காகப் பல முக்கிய உலகத் தலைவர்கள் சீனாவில் கூடியுள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்ற ரஷ்ய அதிபர் புதின், அங்கு சீன அதிபரை நேற்றிரவு சந்தித்து இந்தத் தற்காலிக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ‘கொரிய தீபகற்பப் பகுதியில் அணு ஆயுதம் தொடர்பாக ஏதும் எழாதபடி கண்காணிக்க ஒன்றுபடுவோம்’ என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. வடகொரியா - அமெரிக்கா இடையிலான உறவுச் சிக்கல் சர்வதேச நாடுகளைப் பல நாள்களாகத் தூக்கமிழக்கச் செய்துள்ளது. இந்தப் பிரச்னையில் யார் பக்கமும் சாயாமல் அமைதி காத்துவந்த ரஷ்யா, தற்போது வடகொரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது சர்வதேச அளவில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement