Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சீன அதிபரைச் சந்திக்கும் பிரதமர் மோடி: எல்லைப் பிரச்னைகுறித்து விவாதிக்கப்படலாம்!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று சீன அதிபரைச் சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பில், இந்தியா- சீனா இடையே நிலவும் எல்லைப் பிரச்னைகுறித்து விவாதிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரிக்ஸ் மாநாடு

இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை உள்ளடக்கியது, பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு. உலகின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், இந்த பிரிக்ஸ் நாடுகளில் வந்துவிடுகின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் சந்தித்து, உலகப் பொருளாதார நிலை முதல், நாட்டின் பாதுகாப்பு வரை பேசுவார்கள். 

இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு, சீனாவில் உள்ள சியாமென் நகரில் நேற்றும் இன்றும் நடைபெற உள்ளது. இந்திய - சீன எல்லையில் பதற்றம் விலகி, இயல்புநிலைக்குத் திரும்பிய பிறகு, முதல் முறையாக இந்தியப் பிரதமரும் சீன அதிபரும் நேற்று சந்தித்துக் கொண்டனர். இந்த மாநாட்டில், ரஷ்ய அதிபர் புதின், பிரேசில் அதிபர் மிகேல் தெமேர் ஆகியோரும் கலந்துகொண்டனர். சீன அதிபருடன் இன்று, பிரதமர் மோடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்குப் பின்னர், எகிப்து அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் எனத் தெரிகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement