வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (07/09/2017)

கடைசி தொடர்பு:10:15 (07/09/2017)

ஆங் சாங் சூகியை கௌரவப்படுத்திய பிரதமர் மோடி!

மியான்மர் நாட்டின் சிறப்பு ஆலோசகரான ஆங் சாங் சூகிக்கு கௌரவ நினைவுப்பரிசு கொடுத்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார், பிரதமர் நரேந்திர மோடி.

சூகி- மோடி

மி்யான்மர் நாட்டின் அரசியல் தலைவர், ஆங் சான் சூகி. இவரின் தந்தை அந்த நாட்டின் ராணுவத்தை உருவாக்கியவர். ஆங் சான் சூகி இரண்டு வயதாக இருக்கும்போதே, தந்தை எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவில் கல்வி பயின்ற ஆங் சான் சூகி, ஐ.நா சபையில் பணி செய்தார். தன் நாட்டு மக்களின் துன்பம் கண்டு, ராணுவத்துக்கு எதிராகப் போராடக் களம் இறங்கினார். அகிம்சை வழியில் போராடிய இவருக்குக் கிடைத்தது, 20 ஆண்டு வீட்டுக் காவல் சிறை. அதற்குப் பின் நடந்தவை, நாட்டின் வரலாற்றில் திருப்பங்களை உண்டாக்கின.

ஆங் சாங் சூகி தன்னுடைய சிறு வயதில் இந்தியாவில் வசித்து வந்தார். சிம்லாவில் உள்ள கல்லூரியில் பயின்று வந்த ஆங் சான் சூகி, ‘காலனி ஆதிக்கத்தில் பர்மீஸ் மற்றும் இந்திய அறிவுசார் பாரம்பர்யத்தின் வளர்ச்சி, மேம்பாடு- ஓர் ஒப்பீடு‘ என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரை ஒன்றை சமர்ப்பித்திருந்தார். அந்தக் கட்டுரையின் சிறப்பு நகலைத்தான் தற்போது ஆங் சாங் சூகிக்கு நினைவுப் பரிசாக வழங்கி கௌரவப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி.