மெக்ஸிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

நிலநடுக்கம்

மெக்சிகோ நாட்டில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிகமானோர் பலியாகியுள்ளனர் என்று அந்நாட்டு அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

மெக்ஸிகோ நாட்டில், நேற்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.1 எனப் பதிவானது. இந்த நிலநடுக்கம், ஒட்டுமொத்த மெக்ஸிகோவையே அதிகபடியாகத் தாக்கியுள்ளது. சுனாமி வருவதற்கான வாய்ப்பு என அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மெக்ஸிகோவின் பிஜிஜியப்பன் நகரை 123 கி.மீ தூரத்துக்கு தென் மேற்கில், சுமார் 33 கி.மீ ஆழத்துக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்க விபத்தால் 61 பேர் பலியாகியுள்ளதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் மெக்சிகோ அரசு தகவல் வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் மீட்புப்பணி அதிகாரிகள் தொடர்ந்து மீட்புப் பணிகளைச் செய்து வருகிறார்கள். பல இடங்களில் கட்டடங்கள் தரைமட்டமாக இடிந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. இந்த நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு முழுவதும் அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் மெக்ஸிகோ அதிபர் நியடா அறிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!