மிரட்டும் இர்மா... கூட்டம் கூட்டமாக வெளியேறும் ஃபுளோரிடா மக்கள்! | Hurricane Irma makes landfall in Cuba as Category 5

வெளியிடப்பட்ட நேரம்: 15:59 (09/09/2017)

கடைசி தொடர்பு:15:59 (09/09/2017)

மிரட்டும் இர்மா... கூட்டம் கூட்டமாக வெளியேறும் ஃபுளோரிடா மக்கள்!

இர்மா புயல் கரையைக் கடக்க இருப்பதால் லட்சக்கணக்கான மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாண நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 


கரீபியன் தீவுகளில் கோரதாண்டவம் ஆடிய இர்மா புயல் அமெரிக்காவை நோக்கி நகர்ந்து வருகிறது. இர்மா புயல் பாதிப்பால் கரீபியன் தீவுகளில் 23 பேர் வரை உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். இதையடுத்து அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை நோக்கி இர்மா புயல் நகர்ந்து வருகிறது. அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஃபுளோரிடா மாகாணத்தை இர்மா புயல் தாக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த நேரத்தில் மணிக்கு அதிகபட்சமாக 260 கி.மீ அளவுக்கு காற்று வேகமாக வீசக்கூடும் என்றும், பொதுமக்கள் யாரும் வீடுகளைவிட்டு வெளியில் வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புயல் பாதிப்பில் சிக்கும் அபாயத்தில் இருக்கும் 56 லட்சம் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல ஃபுளோரிடா மாகாண நிர்வாகம் உத்தரவிட்டது. இது அந்த மாகாண மொத்த மக்கள் தொகையில் கால் பங்கு ஆகும். அட்லாண்டிக் பெருங்கடலில் இந்த நூற்றாண்டில் உருவான பெரிய புயலாகக் கருதப்படும் இர்மா புயல், கியூபாவில் கரையைக் கடக்கும் என்று அமெரிக்க வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட ஹார்வி புயலால் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகர் பெரிய பாதிப்புக்குள்ளாகியிருந்தது.