Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

144 திருமண மோதிரங்கள்... கருவில் இறந்த 17 குழந்தைகள்... 9/11 தாக்குதல் சோகம்...

''அம்மா வேலைக்கு வந்துட்டேன்'', ''ஹே டூட் சாஃப்ட ப்ரேக் ஃபாஸ்ட் போலாமா?'', ''நான் உன்னைக் காதலிக்கிறேன்'', ''அந்த க்ளைண்ட் கால் என்னாச்சு'', ''அடுத்த மாசம், ஆப்பிள் ஏதோ புரோடெக்ட் ரிலீஸ் பண்ணப் போகுதாம்...'' 2001-ம் ஆண்டு காலை 8:45 மணிக்கு அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையத்தில் இந்த வார்த்தைகளெல்லாம் கேட்கப்பட்டிருக்கலாம். அடுத்த நிமிடம் இரட்டைக் கோபுரத்தின் ஒரு பகுதியில் விமானம் ஒன்று மோதுகிறது. நெருப்பு ஒவ்வொரு தளமாகப் பரவுகிறது... மக்கள் கூட்டம் பதறி அடித்து ஓடுகிறது. இது, அந்தக் கட்டடத்தில் முதல் 10 தளங்களில் இருந்தவர்களுக்கு உடனடியாகத் தெரியக்கூட வாய்ப்பில்லை. எல்லாரும் பதறி ஓடும்போதுதான் தெரிந்திருக்கிறது. உயிர் பிழைத்தால் போதும் என்று சிலர் மாடியிலிருந்து குதித்தனர். 9/11 தாக்குதல் அமெரிக்காவின் கறுப்பு தினம். 

அடுத்த சில நிமிடங்களில் இரண்டாவது விமானம் இரட்டைக் கோபுரம் மீது மோதுகிறது. சில நொடிகளில் மொத்த பில்டிங்கும் தரை மட்டமாகிறது. இந்தத் தாக்குதலால் இரட்டைக் கோபுரத்தைச் சுற்றிய பகுதி கட்டட இடிபாடுகள் கிளப்பிய தூசுகளால் மூடப்பட்டது. அமெரிக்காவில் பல மைல் தூரத்துக்கு இந்தத் கட்டட தூசுகள் பறந்ததை நாசாவின் புகைப்படம் விளக்கியது. இரட்டைக் கோபுரங்களில் உள்ள அலுவலகங்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பணிபுரிந்து வந்தனர். உலக வர்த்தக மையத்துக்கு வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 1.4 லட்சம் பேராம். இந்தத் தாக்குதலுக்குப் பின் 144 திருமண மோதிரங்கள் கண்டெடுக்கப்பட்டன. கர்ப்பிணி பெண்கள் 17 பேர் தங்களின் கருவில் இருந்த குழந்தைகளோடு சமாதி ஆனார்கள்.  இந்தக் கட்டடத்தில் பரவிய தீயை அணைக்க 100 நாள்கள் ஆனது.  இது, அமெரிக்க வரலாற்றில்  மிகப்பெரிய சோகமாகப் பதிவாகி இருக்கிறது. அந்தத் தருணத்தில் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனும் தாக்கப்பட்டது. தாக்குதல் நடைபெற்ற அடுத்த நாள் விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டது. ஆனால், அதில் எந்த ஒரு தகவலும் பதிவாகவில்லை என்பதுதான் அதிர்ச்சி. 

தாக்குதல் நடந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒசாமா பின்லேடன் இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்று இருப்பதாக அமெரிக்க அரசு ஓர் ஆடியோவை டிசம்பர் 13, 2001-ல் வெளியிட்டது. 10 வருடங்கள் கழித்து அப்போதைய அதிபர் ஒபாமா, 9/11 ஹெல்த் மற்றும் இழப்பீடு மசோதாவுக்கு அனுமதி வழங்கினார். இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற அல்கொய்தா அமைப்பின் தலைமைப் பதவியை வகித்த ஒசாமா பின்லேடன் மே 2, 2011-ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கட்டடங்கள் இடிந்து விழுந்து உருவான மாசுகளின் அளவு மட்டும் 1.8 மில்லியன் டன். இதை, பல பணியாளர்கள் சேர்ந்து 3.1 மில்லியன் மணி நேரத்தில் அகற்றியுள்ளனர். 2001 செப்டம்பரில் தொடங்கிய சுத்தப்படுத்தும் பணி 2002 மே 30-ம் தேதிதான் நிறைவடைந்தது. மீண்டும் உலக வர்த்தக மையம் புதுப்பொலிவுடன் 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி  திறக்கப்பட்டது. 

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள்.. ஆப்கான் போரைத் தொடங்கி இன்னமும் அப்பகுதியில் தீவிரவாத ஒழிப்பை மேற்கொள்கின்றன. இதில், அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்ட துயரங்களும் அடங்கும். இந்தத் தாக்குதல் மனிதர்கள் மீதான இரக்கமற்ற தாக்குதலின் ஆரம்பமாக அமைந்தது. இன்றுவரை உலகின் பல இடங்களில் தொடர் தாக்குதல்கள் நடந்துவருகின்றன. உலகின் வல்லமை படைத்த நாடான அமெரிக்காவைக் கொஞ்சம் சறுக்கவைத்தது இந்தத் தாக்குதல். உலக நாடுகளில் தீவிரவாதத் தாக்குதல்களில் ஆரம்பத்துக்கு இந்தச் சம்பவம் விதை என்பதை மறுக்க முடியாது. 16 வருடங்கள் ஆனாலும் இன்னும் பலரைச் சோகத்தில் ஆழ்த்திக்கொண்டுதான் இருக்கிறது இந்த 9/11 தாக்குதல்.

9/11 தாக்குதல் நினைவலைகள்

9 11 தாக்குதல்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement