Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் ஜப்பானை அச்சுறுத்திய வடகொரியா: அதிர்ச்சியில் உலக நாடுகள்!

தொடர் ஏவுகணைச் சோதனை, அணு ஆயுதச் சோதனை என உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையிலேயே வடகொரியாவின் செயல்கள் உள்ளன. சர்வதேச அளவிலும், ஐ.நா-வின் மூலமாகவும் பல எச்சரிக்கைகள் கொடுத்த பின்னரும், தன் நிலைப்பாட்டை இதுவரை வடகொரியா மாற்றிக்கொள்ளவே இல்லை.

வடகொரியா


அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்தும் அது கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து ஏவுகணை மற்றும் அணு ஆயுதச் சோதனைகளை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், ஜப்பான் நாட்டை அச்சுறுத்தும் வகையில், வடகொரியா இன்று மீண்டும் ஒரு ஏவுகணைச் சோதனையை மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


அதன்படி, வடகொரியா இன்று (வெள்ளிக்கிழமை) பியோங்கி யாங்கில் இருந்து ஏவுகணைச் சோதனையைச் செய்துள்ளதாக தென்கொரியா கூறியுள்ளது. இந்த ஏவுகணை, ஜப்பானைக் கடந்து பசிபிக் பெருங்கடலில் இறங்கும் வகையில் சோதனை செய்யப்பட்டதாக, ஜப்பான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து,மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அங்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜப்பான் அருகே, வடகொரியா நடத்தும் இரண்டாவது ஏவுகணைச் சோதனை இது. வடகொரியாவின் இந்தச் செயலையடுத்து, தென்கொரியா அரசு அவசர ஆலோசனை நடத்திவருகிறது. அதேபோல, அமெரிக்காவுடனும் இதுகுறித்து தென்கொரியா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.


வடகொரியாவுக்கு பெட்ரோல் மற்றும் எண்ணெய்ப் பொருள்கள், ஜவுளி ஏற்றுமதி  செய்வதற்குத் தடைசெய்யும் அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஐ.நா ஒப்புதல் வழங்கிய ஓரிரு நாள்களில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement