Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குடிநீரிலும் படிந்திருக்கும் பிளாஸ்டிக்..! ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

பிளாஸ்டிக்

இதுவரை நாம் பயன்படுத்தி வந்த பிளாஸ்டிக்கைப் பருகிகொண்டிருக்கிறோம் என தெரியுமா?

அறிவியலாளர்கள், 12 நாடுகளில் இருந்து பெறப்பட்ட தண்ணீர் மாதிரியை ஆய்வுசெய்து அதன் மதிப்பை "ஆர்ப் மீடியா"வுக்கு (Orb Media) அனுப்பியுள்ளனர். உலகளாவிய ஆராய்ச்சியின் முடிவில் பிளாஸ்டிக் இழைகள் குழாய் நீரில் கலந்துள்ளது என நிரூபணமாகியுள்ளது. சோதனையில் 83% மாதிரிகளில் பிளாஸ்டிக் இழைகள் கலந்துள்ளது எனவும், அதனை பில்லியன் மக்கள் குடித்துக்கொண்டிருக்கின்றனர் என்றும் கூறுகின்றனர்.

நான் சுத்தமான நீரைதான் குடித்துக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லும் இந்தியர்கள் அனைவருக்கும் இது அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஏனெனில், இந்தச் சோதனையில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து பெறப்பட்ட குழாய் நீர் மாதிரியில் கிட்டத்தட்ட 82.4% பிளாஸ்டிக் இழைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 94% மதிப்பீட்டைப் பெற்று அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. நியூயார்க்கில் உள்ள அமெரிக்கக் கட்டடங்கள், அமெரிக்க சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமையகம் மற்றும்  டிரம்ப் கோபுரம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து மாதிரிகள் பெறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து, பிரான்ஸ்,  ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள் 72% மாசு விகிதம் கொண்டு மூன்றாம் இடத்தில் உள்ளன

சரி. ப்ளாஸ்டிக் துகள்கள் எப்படி நீருடன் கலந்தது? என்ன மர்மம் இது? 
சமீபத்திய ஆய்வொன்றில், சலவை இயந்திரம் (Washing machine) ஒவ்வொரு சுழற்ச்சியின்போதும் 7,00,000 மைக்ரோ பிளாஸ்டிக் இழைகளை வெளியிடுகிறது என கண்டறிந்துள்ளனர். டம்பிள் உலர்த்திகள் (Tumble dryers) மூலமும் மெல்லிய பிளாஸ்டிக் இழைகள் வெளியிடப்படுகின்றன. மழையின்போது வளிமண்டத்திலுள்ள மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் பெருக்கி பூமியில் விடப்படுகிறது. குடிநீரைப் பெரும்பாலும் ஆறுகள், ஏரிகள் மூலமாகத்தான் பெறுகிறோம். மழைநீர் இவற்றில் கலந்து மாசு ஏற்படுத்தியுள்ளது. 
ஜெர்மனியில் நடைபெற்ற ஆய்வில் 24 பீர் பிராண்டுகளில் மட்டுமல்லாமல் தேன் மற்றும் சர்க்கரையிலும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள் உள்ளதைக் கண்டறிந்துள்ளனர். 2015ல் பாரிசில் நடைபெற்ற ஆய்வில் ஒவ்வொரு ஆண்டும் நகரத்தில் 3-10 டன் மைக்ரோ பிளாஸ்டிக் இழைகள் வீழ்வதாக கூறியுள்ளனர். 

இரண்டு விஷயங்களுக்காக நாம் கவலைப்பட வேண்டும் என இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட Mahon கூறியுள்ளார். மைக்ரோ பிளாஸ்டிக், கழிவுகளில் உள்ள  பாக்டீரியாக்கள், மாசுக்கள் மற்றும் நுண்ணுயிரிகளையும் ஈர்க்கும். பிளாஸ்டிக் இழைகளில் உள்ள நானோ துகள்களை அளவிடமுடியாது. இந்த நானோ துகள்களால் செல்களை ஊடுறுவ முடியும். உறுப்புகளையும் ஊடுறுவ முடியும்.

மைக்ரோ பிளாஸ்டிக் துகளுள்ள காற்றை சுவாசிப்பதன் மூலம் இவை நம் நுரையீரலின் கீழ்பகுதிக்குச் சென்று ரசாயனத்தை வழங்குவதோடு சுழற்சியிலும் ஈடுபடலாம். இவ்வாறு மைக்ரோ பிளாஸ்டிக் இழைகள் மனித உடலில் செல்வதால் எந்த மாதிரியான பிரச்னையை எதிர் கொள்ளப்போகிறோம் என்பது தெரியாது. எனவே ஆராய்ச்சியை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

1950களில் முதன்முதலாக பிளாஸ்டிக் தயாரிக்கப்பட்டபோது 2 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது அது 8.3 பில்லியன்களாக உயர்ந்துள்ளது. 2050 களில் 34 பில்லியன்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்டியன் நிறுவனம் போன மாதம் நடத்திய ஆய்வின்படி உலகளவில் ஒவ்வொரு நிமிடத்திலும் மில்லியன் பாட்டில்கள் வாங்கப்படுகிறது. 2021ல் இந்த நிலை 20% சதவிகிதமாக உயரும் என்கின்றனர்.

orb media

Source: Orb Media

இதில் என்ன இருக்கிறது. பிளாஸ்டிக்கை மறு சுழற்சி செய்து விடலாமே என நினைக்கிறீர்களா? 

2015ல் மொத்தம் 7 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாக்கப்பட்டன. இதிலிருந்து மறுசுழற்சி செய்யப்பட்டவை 9%, எரிக்கப்பட்டவை 12%, மீதம் உள்ள கழிவுகள் நிலத்திலேயே விடப்பட்டுள்ளது. உலகில் இருக்கும் 7 பில்லியன் மக்களுக்கு தெரியாது நாம் பிளாஸ்டிக் கிரகத்தில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று.

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க தனி மனிதர்கள் எந்த மாதிரியான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென நினைக்கறீர்கள் என்பதை கமெண்டில் பகிர்ந்துகொள்ளுங்கள்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement