லாகூர் இடைத்தேர்தலில் வென்ற நவாஸ் ஷரீஃபின் மனைவி!

லாகூர் தொகுதி இடைத்தேர்தலில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃபின் மனைவி பேகம் குல்சூம் வெற்றிபெற்றார். 


பனாமா ரகசிய ஆவணங்கள்மூலம் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய நவாஸ் ஷரீஃபை தகுதிநீக்கம் செய்து, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 28-ல் உத்தரவிட்டது. அதனால், பிரதமர் பதவியையும்  நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் நவாஸ் ஷரீஃப் இழந்தார். அவரது தகுதி நீக்கத்தைத் தொடர்ந்து, காலியான லாகூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. 
இதில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - (நவாஸ்) கட்சியின் பேகம் குல்சூம் மற்றும் கிரிக்கெட் வீரரும் அரசியல்வாதியுமான இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் வேட்பாளர் யாஸ்மின் ரஷீத் இடையில் கடும் போட்டி நிலவியது. முடிவில், 59,413 வாக்குகள் பெற்ற பேகம், 13,000-த்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் யாஸ்மினை வீழ்த்தினார். இதில், யாஸ்மின் ரஷீத் 46,415 வாக்குகள் பெற்றார். பயங்கரவாதி ஹபீஸ் சையதின் மில்லி முஸ்லிம் கட்சி வேட்பாளர் ஷேக் யாகூப்  4 ஆயிரம் வாக்குகள் பெற்று 3-வது இடம் பிடித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!