Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மெக்ஸிகோ நிலநடுக்கம்: உயிரிழப்பு 140ஆக அதிகரிப்பு

மெக்ஸிகோ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 140ஆக உயர்ந்துள்ளது.  


ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால், தலைநகர் மெக்ஸிகோ சிட்டியில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்ட சேவைகள் அடியோடு முடங்கின. தலைநகர் மெக்ஸிகோ சிட்டிக்கு தெற்கே உள்ள மோர்லாஸ் மாகாணத்தில் மட்டும் கட்டட இடிபாடுகளில் சிக்கி 64 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மெக்ஸிகோவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும் என்று பரவிய தகவலால், மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். கட்டட இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியுள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது. மீட்புப் பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. மெக்ஸிகோவில், கடந்த 1985-ம் ஆண்டு ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தின் நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்ட நிலையில், அதே தினத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அந்நாட்டில், கடந்த ஒன்றாம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 90 பேர் உயிரிழந்தனர். இக்கட்டான இந்த நேரத்தில், மெக்ஸிகோவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement