Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்வதேச தடையால் வடகொரியாவில் பெட்ரோல் விலை பன்மடங்கு உயர்வு!

உலக நாடுகளால் ஒட்டுமொத்தமாக ஒதுக்கப்பட்டு சர்வதேச அளவில் தடை விதிக்கப்பட்டிருப்பதால் வடகொரியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

வடகொரியா

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில், தொடர் ஏவுகணை மற்றும் அணுகுண்டுச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. முன்னதாக, அமெரிக்காவின் போர் மிரட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், வடகொரியாவில் புதிய ஏவுகணைகளின் அறிமுகமும் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இதனால், சர்வதேச அளவில் பல நாடுகளின் கண்டனங்களைச் சம்பாதித்தது வடகொரியா. 

சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதச் சோதனைகளை நடத்திவரும் வடகொரியா மீது, ஐ.நா சபை பொருளாதாரத் தடை விதித்துள்ளபோதும், அதை வடகொரியா பொருட்படுத்தவேயில்லை. இந்நிலையில் உலக நாடுகள் பலவும் வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இதனால் வடகொரியாவுக்கு அத்தியாவசியப் பொருள்கள், எரிபொருள் உள்பட அனைத்து ஏற்றுமதிகளும் உலக நாடுகளால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் பெட்ரோல், டீசல் உள்பட பல அத்தியாவசியப் பொருள்களின் விலையும் சரமாரியாக உயர்ந்துள்ளது. இதனால் வடகொரியா நாட்டு மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றன. மேலும், வடகொரியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் எந்தவொரு பொருளையும் இனி வாங்குவதில்லை என உலக நாடுகள் முடிவெடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement