Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’ரோஹிங்யா மக்களை மியான்மருக்கு அனுப்ப வேண்டும்’: உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

ரோஹிங்யா மக்களை விரைவில் மியான்மர் அனுப்ப வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் பா.ஜ.க வழக்கறிஞரான அஷ்வினி குமார் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ரோஹிங்யா

மியான்மர் நாட்டில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இருந்தபோதும், நாட்டின் மேற்குப் பகுதியான ரகைண் மாநிலத்தில் வசிக்கும் இந்திய மற்றும் வங்காளதேச வம்சாவளியினரான ரோஹிங்யா முஸ்லிம்கள் இன-மத வெறித் தாக்குதலுக்கு ஆளாகிவருகின்றனர். இத்தாக்குதல்களில் மியான்மர் ராணுவமே ரோஹிங்யா மக்களை இனப்படுகொலை செய்துவருவதாகப் பிரச்னை எழுந்துள்ளது. தொடர்ச்சியான தாக்குதல்களை அடுத்து 20 ஆயிரம் அப்பாவி மக்கள் அவர்களின் ஊர்களிலிருந்து வெளியேறினர்; வங்காளதேச எல்லையில் உள்ள மலைப்பகுதியில் 60 ஆயிரம் பேர் முகாமிட்டுள்ளனர். ஆனாலும் வங்காளதேச அரசு அவர்களை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்காமல் இருந்துவருகிறது.

இந்நிலையில் பா.ஜ.க வழக்கறிஞரான அஷ்வினி குமார், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், “ரோஹிங்யா மக்களை மியான்மருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்தியாவில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ள்ளார் அஷ்வினி குமார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement