Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மத்தியதரைக்கடலில் கரைஒதுங்கிய ராட்சத ஆமைகள் - ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்

ஸ்பெயின் நாட்டின் வடகிழக்குக் கடற்கரையில், ராட்சத ஆமை ஒன்று இறந்த நிலையில் அண்மையில் கரை ஒதுங்கியது. 

ஆமை
 

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா பகுதியில் உள்ள கலேலா கடற்கரையில்தான் இந்த அரிய நிகழ்வு நடந்துள்ளது. சுமார் இரண்டு மீட்டர் நீளமுள்ள இந்த ராட்சத ஆமையின் அறிவியல் பெயர்,  ’Dermochelys Coriacea’. இதை, leatherback turtle என்றும் அழைக்கிறார்கள். இந்த மிகப்பெரிய ஆமை, 700 கிலோ எடை இருந்துள்ளது. கரை ஒதுங்கிய ஆமையை கிரேன் உதவியோடு அப்புறப்படுத்தியுள்ளனர்.

 

 

ஸ்பெயின் கடற்கரையில் ராட்சத ஆமை கரை ஒதுங்குவது, இந்த மாதத்தில் இது இரண்டாவது தடவை. செப்டம்பர் மாத துவக்கத்தில் 300 கிலோ எடையுள்ள ராடசத ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. மத்தியதரைக்கடல் (Mediterranean) பகுதியில் leatherback turtle கரை ஒதுங்குவது மிகவும் ஆச்சர்யம் அளிப்பதாக, உயிரியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். காரணம், ராட்சத ஆமைகள் வெப்பமண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டலத் தண்ணீரில் வசிப்பதையே விரும்பும் என்றும், அவை பொதுவாக தென் அமெரிக்காவில்தான் காணப்படும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2000 ஆண்டுகளில், இதுவரை 10 ராட்சத ஆமைகள்தான் மத்திய தரைக்கடல் பகுதியில் கரைஒதுங்கியுள்ளன. எனவே, இந்த இரண்டு ராட்சத ஆமைகள் இறந்த நிலையில் கரைஒதுங்கியுள்ளது அரிய நிகழ்வாக சூழலியலாளர்கள் கருதுகின்றனர். அவற்றின் உடல்களை பார்சிலோனா பல்கலையில் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். பருவநிலை மாற்றங்களால் அரிய உயிரினங்களின் வசிப்பிடமே மாறியிருப்பது ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement