Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பனாமா பேப்பர்ஸ் விவகாரம்: வழக்கைச் சந்திக்க பாகிஸ்தான் திரும்பினார் நவாஸ்!

ஊழல் வழக்கைச் சந்திக்கவேண்டி லண்டனிலிருந்து பாகிஸ்தான் வந்தார், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்.

நவாஸ் ஷெரிஃப்

பனாமா கேட் ஊழல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீ ஃப் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிரான வழக்கு விசாரணை தீவிரமடைந்துவருகிறது. உலகில் உள்ள பல முக்கியப் பிரமுகர்கள், ஊழல்செய்து சேர்த்த கறுப்புப் பணத்தைப் பாதுகாக்க, மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் முதலீடுசெய்துவருவதாக, பனாமா லீக்ஸ் ஒரு பரபரப்பான செய்தியை வெளியிட்டது. உலகத்தையே பரபரக்கச்செய்த ஊழல் வெளியீட்டுப் பட்டியலில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்  பெயரும் சிக்கியிருந்தது பரபரப்பை அதிகப்படுத்தியது. நவாஸ் ஷெரீஃப் மட்டுமல்லாமல், அவரின் மகன்களும் இந்த ஊழல் வழக்கில் உள்ளதால், அவர்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து,  நவாஸ் பிரதமர் பதவியை இழக்கும் அளவுக்கு விவகாரம் தீவிரமடைந்தது.

இதுவரை நடந்துவந்த விசாரணைகளின்போது நவாஸின் மகன்களும் மகளும் மட்டுமே ஆஜராகி வந்தனர். நவாஸ் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதும், தனது மனைவி லண்டனில் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் காரணத்தால், ஆஜராக முடியவில்லை என விளக்கமளித்திருந்தார். இந்நிலையில், நீண்ட நாள்களுக்குப் பின்னர் ஊழல் வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக, லண்டனிலிருந்து இன்று பாகிஸ்தான் வந்துள்ளார் நவாஸ் ஷெரீஃப்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement