Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெற்றி இழுபறி: எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறார் ஏஞ்சலா!

ஏஞ்சலா மெர்கெல்

ஜெர்மனி தேர்தல் முடிவுகளில் ஏற்பட்டுள்ள இழுபறியின் காரணமாக எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கவுள்ளார் ஏஞ்சலா மெர்கெல்.

ஜெர்மனி நாடாளுமன்றத் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியின் ஏஞ்சலா மெர்கல் மீண்டும் ஜெர்மனி அதிபராகி உள்ளார். ஏஞ்சலா 4-வது முறையாகப் போட்டியிட்ட இந்த 19-வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்தது. பின்னர் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கல் 33.2 சதவிகிதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரைத் தொடர்ந்து, சமூக ஜனநாயகக் கட்சி 20.8 சதவிகிதம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் வளர்ந்த நாடுகளில் ஒன்றான, ஜெர்மனியின், முதல் பெண் அதிபரான  ஏஞ்சலா மெர்க்கல் 12 ஆண்டுகளாக அதிபராக தொடர்கிறார்.

தற்போது ஏஞ்சலா மெர்கெல் வெற்றி பெற்றுள்ள போதும் இழுபறி நிலை நீடிப்பதன் காரணமாக தற்போது மீண்டும் அதிபராவதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவைக் கோரியுள்ளார். இதனால் ஜனநாயகக் கட்சி மற்றும் கிரீன் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து ஏஞ்சலா ஆட்சி அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement