'சவுதியில் கார் ஓட்ட பெண்களுக்கு அனுமதி..!'

சவுதி அரேபியா கார் ஓட்ட அனுமதி


சவுதி அரேபியப் பெண்கள் கார் ஓட்ட, அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது. 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இது அமலுக்கு வரவிருக்கிறது.

சவுதி அரேபியாவில், 1990-ம் ஆண்டிலிருந்து கார் ஓட்ட பெண்களை அனுமதிக்க வேண்டும்; அதற்கு லைசென்ஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. ஆனால், அந்நாட்டு அரசு அனுமதி அளிக்காமல், படிப்படியாகப் பெண்களுக்குப்  பல்வேறு உரிமைகளை வழங்கிவந்தது. சமீபத்தில், நாட்டின் முக்கிய மைதானத்தின் அரங்கில் அமர பெண்களுக்கு அனுமதி தரப்பட்டது. 2015-ம் ஆண்டிலிருந்து பெண்கள், அந்நாட்டுத் தேர்தலில் ஓட்டுப் போடவும் தேர்தலில் நிற்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சவுதி மன்னர் சல்மான், 'சவுதி பெண்கள் கார் ஓட்ட அனுமதி வழங்கி, செப்டம்பர் 26-ம் தேதி உத்தரவிட்டுள்ளார் என்று அந்நாட்டு அரசு பத்திரிகை கூறியுள்ளது. கார் ஓட்ட, அதற்கான விதிமுறைகள் வகுத்து அறிக்கை அளிக்க கமிட்டி அமைக்க வேண்டும்; அதை 30 நாள்களுக்குள் செய்து முடிக்க வேண்டும்' என்றும் மன்னர் கூறியுள்ளார். 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து அமலுக்கு வரவிருக்கிறது. நாட்டை நவீனமயமாக்கும் கொள்கையின் அடிப்படையில், பெண்களின் கோரிக்கைகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. சவுதி அரேபியாவின் இந்த அறிவிப்பை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள்ளன. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!