இனி 280... ட்விட்டர் பயனாளர்களுக்‌கு ஒரு நற்செய்தி!

ட்விட்டரில் ட்வீட் செய்யும் வார்த்தை வரம்பை 280 ஆக அதிகரிக்க, ட்விட்டர் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.

ட்விட்டர்

ட்ரம்ப் முதல் சுப்பிரமணியன் சுவாமி வரை ட்விட்டரில்தான் பரபரப்பைப் பற்றவைப்பார்கள். குறிப்பாக, ட்விட்டரில் கமல் தொடுக்கும் வார்த்தைப் போர், தமிழக அமைச்சர்களைக் கதிகலங்க வைத்துள்ளது. அதேபோல, சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களும் ட்விட்டரில் செம ஆக்டிவாக உள்ளனர். இதனால், இதைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. 

ஆனால், ட்விட்டரில் 140 வார்த்தைகளுக்குள்தான் ட்வீட் செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. இது, ட்விட்டரீஸ்-க்கு சற்று வருத்தம் தரும் செயலாகத்தான் இருந்துவந்தது. இந்நிலையில், அந்த வருத்தத்தைப் போக்குவதற்கு ட்விட்டர் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. அதன்படி, 280 வார்த்தைகளுக்கு ட்வீட் செய்யும் சோதனை முயற்சியில் ட்விட்டர் இறங்கியுள்ளது.

ஆனால், சோதனை முயற்சி என்பதால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே 280 வார்த்தைகளில் ட்வீட் செய்ய முடியும். இதனால், மற்ற பயனாளர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர். விரைவில், இந்த வசதி அனைருக்கும் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!