Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'பிளேபாய்’ நிறுவனர் ஹூக் ஹெஃப்னர் காலமானார்!

அமெரிக்காவின் பிரபல இதழான ‘பிளேபாய்’ இதழின் நிறுவனர் ஹூக் ஹெஃப்னர், வயோதிகம் காரணமாக மரணமடைந்தார். இவருக்கு வயது 91.

ஹூக் ஹெஃப்னர்

1953-ம் ஆண்டு, அமெரிக்காவில் பொழுதுபோக்கு இதழாக அறிமுகப்படுத்தப்பட்டது, ‘பிளேபாய்’ இதழ். உலக அளவில் ஆண்களால் அதிகம் வாங்கப்படும் இதழாகக் கருதப்படும் இந்த இதழின் அட்டைப் படங்களுக்கு, ஆரம்ப காலங்களில் மிகுந்த வரவேற்பு காணப்பட்டது. ‘பிளேபாய்’ இதழின் அட்டைப்படங்களில், தங்கள் புகைப்படம் இடம்பெறுவதை பிரபலங்கள் அந்தக் காலத்தில் மிகப்பெரும் கௌரவமாகவே கருதியுள்ளனர். இந்த இதழ் முதல் பிரதியின் அட்டைப்படத்தில் இடம்பெற்றவர், மர்லின் மன்றோ. 20-ம் நூற்றாண்டிலேயே சுமார் ஒரு கோடி பிரதிகளுக்கு நிகராக விற்பனையான இந்த இதழ், தற்போது வெறும் 10 லட்சம் இதழ்கள் மட்டுமே விற்பனையாகி வருவதாகக் கூறப்படுகிறது.

20-ம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான இந்த இதழின் நிறுவனர்தான் ஹூக் ஹெஃப்னர். வயோதிகம் காரணமாக இன்று மரணமடைந்ததாக ஹெஃப்னரின் மகன் அறிவித்தார். வெறும் 600 அமெரிக்க டாலர்களில் தொடங்கப்பட்ட ஓர் இதழை, 60 ஆண்டுகளில் உலகளவில் வரவேற்புப் பெறுவதற்குக் காரணமாக அமைந்தவர் ஹெஃப்னர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement