Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சி.என்.என் சேனலுக்கு எச்சரிக்கை விடுத்த ரஷ்ய அரசு..!

அமெரிக்காவைத் தலைமை இடமாகக்கொண்ட செய்திச் சேனல் சி.என்.என், ஒளிபரப்பு விதிமுறைகளை மீறியுள்ளது என்று ரஷ்யத் தகவல் ஒளிபரப்புத்துறை ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. 


அமெரிக்காவைச் சேர்ந்த செய்திச் சேனல் சி.என்.என், உலகம் முழுவதும் ஒளிபரப்பாகிவருகிறது. ரஷ்யாவில் செயல்படும் சி.என்.என்,  ரஷ்யாவின் ஒளிபரப்பு விதிகளை மீறியுள்ளது என்று அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து ரஷ்ய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செய்தித் தொடர்பாளர், 'சி.என்.என் தொலைக்காட்சி, அடிக்கடி ஒழுங்குமுறை விதிகளை மீறுகிறது. இருந்தாலும் அந்தச் சேனலைத் தடைசெய்வது பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. அந்தச் சேனல் நிகழ்ச்சியின்போது, காலாவதியான பதிவுசெய்யப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தியுள்ளது. இதுபோன்ற தவறுகள் சாதாரணமான ஒன்றுதான். இந்தத் தவற்றைச் சரிசெய்வது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சி.என்.என் சேனல் தொடர்ந்து கண்காணிக்கப்படும்' என்று தெரிவித்துள்ளது. வழக்கமாக, தவறான தகவல்களைப் பரப்புவதற்கு ரஷ்ய சட்டப்படி 170 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்படும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement