’பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’: இலங்கைத் தமிழர்களுக்காக வைகோ கோரிக்கை! | ’should conduct public referendum': Vaiko at UNO

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (30/09/2017)

கடைசி தொடர்பு:15:00 (30/09/2017)

’பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’: இலங்கைத் தமிழர்களுக்காக வைகோ கோரிக்கை!

’இலங்கைத் தமிழர்களுக்காக நீதி கிடைக்க வேண்டுமெனில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என ஐ.நா கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.

வைகோ

ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலில் பங்கேற்றுப் பேசிவரும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவை சிங்களர்கள் சூழ்ந்துகொண்டு தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சிங்களர்கள் மீண்டும் பிரச்னை செய்யக்கூடும் என்பதால், புலம் பெயர் வாழ் இலங்கைத் தமிழர் அமைப்புகள், ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் நிர்வாகத்திடம் இந்தச் சம்பவம் குறித்துப் புகார் கொடுத்தனர். இதையடுத்து, ஐ.நா கவுன்சில் பாதுகாப்புத் துறையினர் வைகோவுக்குப் பாதுகாப்பு மேற்கொண்டுள்ளனர்.


இதனிடையே, ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் பேசிய வைகோ, "1990-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதியன்று, மனித உரிமைகளுக்கான வியன்னா பிரகடனத்தின்படி, உலகில் அனைத்து மக்களுக்கும் சம உரிமைகளும், குறிப்பாக சுய நிர்ணய உரிமையும் உண்டு என்பதாகும். இந்த வகையில் இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் ஐ.நா சபையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் மற்றும் ஆணையரிடம் வைகோ கோரிக்கை மனு அளித்துள்ளார்.