Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தனிநாடு பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது கட்டலோனியா!

ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதியான கட்டலோனியா தனிநாடு கோரிக்கை முன்வைத்துப் போராடி வந்தது. அம்மாநில அரசு நடத்திய வாக்கெடுப்பில் 90% கட்டலோனிய மக்கள் ஸ்பெயினிலிருந்து வெளியேற ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர். 

ஸ்பெயின் நாட்டில் வளம் மிகுந்த பகுதியான கட்டலோனியா தொடர்ந்து தனிநாடு கோரிக்கை வைத்து வந்தது. ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு கட்டலோனியா பகுதியிலிருந்து கிடைக்கிறது. ஸ்பெயின் அரசாங்கம் இவர்களது கோரிக்கையை நிராகரித்து வந்தது. இந்நிலையில் கட்டலோனிய மாநில அரசு தனிநாடு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்துவது என முடிவு செய்தது.

ஆனால், ஸ்பெயின் அரசு இந்தப் பொது வாக்கெடுப்பு நடத்தக் கூடாது எனத் தடை விதித்தது. ஆனால், கட்டலோனிய அரசு தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்துவோம் என்றது. இதையடுத்து நேற்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், இந்த வாக்கெடுப்பில் ஸ்பெயின் அரசு, காவல்துறை மூலம் முடக்க, வாக்களிக்க வந்தவர்கள்மீது தாக்குதல் நடத்தியது. 

 

இந்தத் தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர். ஸ்பெயினின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியளிப்பதாக உலக நாடுகள் பல கருத்து தெரிவித்தனர். நேற்று நடந்த பார்சிலோனா கால்பந்து போட்டியில் ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய பெரிய மைதானத்தில், ஒரு ரசிகர்கூட இல்லாமல் நேற்றைய போட்டி நடந்தது. 

வாக்கெடுப்பில், 90% கட்டலோனிய மக்கள் தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தனிநாடு வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement