Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்க இசைக் கலைஞர் டாம் பெட்டி காலமானார்!

அமெரிக்காவின் புகழ்பெற்ற இசைக் கலைஞர் டாம் பெட்டி காலமானார். அவருக்கு வயது 66. 


அமெரிக்காவைச் சேர்ந்த இசைக் கலைஞர் டாம் பெட்டி, ஃப்ளோரிடா மாகாணத்தில் 1950-ம் ஆண்டு பிறந்தார். சிறு வயது முதலே இசையின் மீது கொண்ட ஆர்வத்தினால், பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு, இசைக் குழுவில் சேர்ந்தார். அவர், அமெரிக்காவின் புகழ்பெற்ற இசையான ராக் & ரோலில் சிறந்துவிளங்கினார். கிட்டார் வாசிப்பதில் புலைமை பெற்றிருந்தார். மூன்று முறை கிராமி விருதுகளை வென்றுள்ளார். 18 முறை கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். அவருடைய 'அமெரிக்கப் பெண்' (American girl) ஆல்பம் பாடல், உலகின் 100 சிறந்த கிட்டார்  பாடலில் 76-வது இடத்தைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக யூ.சி.எல்.ஏ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் டாம் பெட்டி. சிகிச்சை பலனின்றி இதயத்துடிப்பு முடக்கம் (cardiac arrest) காரணமாக உயிரிழந்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement