இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றார் பிரிட்டன் எழுத்தாளர்!

2017-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர் கசுவோ இஷிகுரோவுக்கு (Kazuo Ishiguro) அறிவிக்கப்பட்டுள்ளது. 


கலை, இலக்கியம், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருது உலகின் மிகப்பெரிய விருதாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் விருதுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், இன்று இலக்கியத்துக்கான விருதை, நோபல் பரிசுக் குழுத் தலைவர் சாரோ டேனியஸ் அறிவித்தார். அந்த விருது பிரிட்டனைச் சேர்ந்த கசுவோ இஷிகுரோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர், ஜப்பானில் பிறந்து பிரிட்டனில் குடியேறியவர். ஆங்கிலத்தில் நாவல்கள் மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ளார். மேலும், 1989-ம் ஆண்டு எழுதிய 'த ரிமைன்ஸ் ஆப் த டே' (The Remains of the Day) நாவலுக்காக புக்கர் விருது வென்றுள்ளார். காசுவுக்கு நோபல் விருதுடன் சேர்த்து, 7 கோடி ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படவுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!