Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓர் ஆண்டில் மட்டும் 8,000 சிறார்கள் உயிரிழப்பு! ஐ.நா பொதுச்செயலாளர் வேதனை

'உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் உள்நாட்டுப் போரில் சிக்கி 8,000 சிறார்கள் உயிரிழந்துள்ளனர்' என்று ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியா கட்ரஸ் வேதனை தெரிவித்துள்ளார். 


உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டுள்ள சிறார்கள் குறித்த அறிக்கையை ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியா கட்ரஸ் வெளியிட்டுள்ளார். அதன்படி, கடந்த ஆண்டில் மட்டும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறார்கள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, ஆஃப்கானிஸ்தானில் மட்டும் 3,512 சிறார்கள் பலியாகியுள்ளனர். ஆஃப்கானிஸ்தான் வரலாற்றிலேயே, இந்த முறை அதிகமான சிறார்கள் இறந்துள்ளனர். சோமாலியா மற்றும் சிரியாவில், சிறார்களை ஆயுதம் ஏந்தச் செய்யும் பழக்கம், கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. தெற்கு சூடானில் மட்டும் கடந்த ஆண்டு 1,022 சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தீவிரவாதக் குழுக்கள் மட்டுமல்ல, அரசும் சிறார்களை ராணுவத்துக்குப் பயன்படுத்தியுள்ளது வேதனையளிக்கிறது' என்று தெரிவித்தார். மேலும், சிறார்களை ராணுவத்தில் சேர்த்ததற்கும் கண்டனம் தெரிவித்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement