Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கானாவில் எரிவாயுக் கிடங்கு வெடித்துச் சிதறியதில் 7 பேர் பலி

கானா நாட்டில் எரிவாயுக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் பலியாயினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

கானா

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஒரு சிறிய நாடு கானா. அந்நாட்டின் தலைநகரான அக்கரா நகரில், அரசுக்குச் சொந்தமான இயற்கை எரிவாயுக் கிடங்கு ஒன்று உள்ளது. இந்தக் கிடங்கில் நேற்று திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டு பின்னர் ஒட்டுமொத்த கிடங்கும் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து வெளியேறினர். 

இந்த விபத்தில் இதுவரை 7 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும், 132 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த இயற்கை எரிவாயுக் கிடங்கு வெடித்துச் சிதறும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.  தீயை அணைக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விபத்துகுறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement