பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்ற அமெரிக்கர்!

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இன்று மதியம் ஸ்டாக்ஹோல்மில் அறிவிக்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உட்பட ஆறு பேர் இந்த நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். அதில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நட்ஜ் தியரிக்குப் பேர் போன ரிச்சர்ட் தாலர் விருதைத் தட்டிச் சென்றார்.

நோபல்

தனிநபர் மனநிலை மற்றும் நடத்தைகள் பொருளாதாரத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றிய ஆராய்ச்சிக்காக இந்த நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 

72 வயதான இவர் எழுதிய 'நட்ஜ்' என்ற புத்தகம் பொருளாதாரம் மற்றும் தனிநபருக்கு இடையிலான உறவை விரிவாக அலசுகிறது. மிகவும் பிரபலமான இந்தப் புத்தகம் அந்த ஆண்டின் பெஸ்ட் செல்லர் புத்தகமாகவும் விளங்கியது. இவருடைய ஆய்வுகள் பொருளாதாரத்தின் மீதான பார்வையையே மாற்றியிருக்கிறது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!