Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கட்டலோனியா தனிநாடு: ஐந்து நாள்களில் முடிவெடுக்கக் கெடு!

ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதியான கட்டலோனியா, தனிநாடு கோரிக்கை தொடர்பான இறுதி முடிவை எடுக்க ஐந்து நாள்கள் அவகாசம் அளிப்பதாக ஸ்பெயின் அறிவித்துள்ளது.

கட்டலோனியா

ஸ்பெயின் நாட்டில் வளம் மிகுந்த பகுதியான கட்டலோனியா, தொடர்ந்து தனிநாடு கோரிக்கையை வைத்துவந்தது. ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு கட்டலோனியா பகுதியிலிருந்து கிடைக்கிறது. ஸ்பெயின் அரசாங்கம், இவர்களது கோரிக்கையை நிராகரித்துவந்தது. இந்நிலையில், கட்டலோனிய மாநில அரசு, தனிநாடுகுறித்து  ஸ்பெயினின் தடையையும் மீறி பொது வாக்கெடுப்பு நடத்தியது. ஆனால், இந்த வாக்கெடுப்பில், ஸ்பெயின் அரசு காவல்துறை மூலம் முடக்க, வாக்களிக்க வந்தவர்கள்மீது தாக்குதல் நடத்தியது. வாக்கெடுப்பில், 90 சதவிகித கட்டலோனிய மக்கள், தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்து, தனிநாடு வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ளதாகவும் அறிவித்தது.

இந்நிலையில், ஸ்பெயின் பாராளுமன்றத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் மரியானோ ரஜாய், “கட்டலோனியா தனி நாடாகப் பிரிவதுகுறித்த முடிவை இன்னும் ஐந்து நாள்களில் உறுதியாகத் தெரியப்படுத்த வேண்டும். வரும் 19-ம் தேதி காலை 10 மணிக்குள் கட்டலோனியா தனது முடிவை ஸ்பெயின் மக்களுக்கு அறிவிக்க வேண்டும்’ எனக் கூறினார்.

ஸ்பெயின் நாட்டின் ஒற்றுமைக்காகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் அமைதிப் பேரணி நடத்திவருகின்றனர். அதே வேளையில் கட்டலோனியா மக்கள், தனிநாடு கோரிக்கையுடன் போராட்டம் நடத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement