வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (19/10/2017)

கடைசி தொடர்பு:10:15 (19/10/2017)

காந்தியின் சொந்த இடத்திலேயே அவருக்குக் கட்டப்பட்ட அருங்காட்சியகம்!

தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில், மகாத்மா காந்திக்கு ஓர் அருங்காட்சியகம் நேற்று திறக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம், காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது, அவர் வாங்கிய இடத்திலேயே இந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டதுதான்.

காந்தி

காந்தி தன் இளமைக் காலத்தில், பாரிஸ்டராகத் தொழில் செய்வதற்காக தென்னாப்ரிக்காவுக்குச்  சென்றிருந்தார். அப்போது, அங்குள்ள   டர்பன் நகரில் வசித்துவந்தார். 1897-ம் ஆண்டு, அங்கு ஒரு சிறிய இடத்தை விலைக்கு வாங்கினார். அங்கு, பொது சந்திப்புகளை அவர் நடத்திவந்தார். 1914-ம் ஆண்டு, காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வருவதற்கு முன், தனது சொந்த இடத்தை நேடால் இந்திய காங்கிரஸுக்குக் கொடுத்துவிட்டார். தற்போது, அதே இடத்தில் காந்திக்கு ஓர் அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை, தீபாவளியன்று மத்திய அமைச்சர் வி.கே.சிங் திறந்துவைத்தார்.