அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவுக்குத் தடை விதித்த நீதிமன்றம்!

ஆறு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்  பிறப்பித்த உத்தரவுக்கு உள்ளூர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

trump

ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாட்டு மக்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் ஒரு புதிய உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவு அக்டோபர் 18-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிபரின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் ஹவாய் மாகாண நீதிமன்றத்தில் பொதுநல ஆர்வலர் ஒருவரால் வழக்கு தொடரப்பட்டது. விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், அதிபரின் உத்தரவில் முற்றிலும் நியாயமில்லை என ட்ரம்பின் உத்தரவுக்குத் தடை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

மேலும், தடை விதிக்கப்பட்ட ஆறு நாட்டு மக்கள் அமெரிக்காவுக்குள் வருவதால் நாட்டின் பாதுகாப்புக்குத் தீங்கு விளையும் எனக் கூறுவது முற்றிலும் ஆதாரமற்ற விதியாகும். குறிப்பாக தடை விதிக்கப்பட்ட ஆறு நாடுகளும் இஸ்லாமிய நாடுகள் என்பதால் அதிபரின் உத்தரவு அமெரிக்காவின் சட்ட விதிகளை மீறும் செயல் என்றும் அறிவித்த நீதிமன்றம், ட்ரம்பின் உத்தரவுக்குத் தடை விதிப்பதாக உத்தரவிட்டது.
 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!