’கறுப்புத் திங்கள்’: நொறுங்கிய வால் ஸ்ட்ரீட்; புரண்ட அமெரிக்க வர்த்தகம்!

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கப் பங்கு வர்த்தகத்தில் விழுந்த மிகப்பெரும் அடியால் அமெரிக்க வர்த்தகச் சூழலே புரட்டிப் போடப்பட்டது.

வால் ஸ்ட்ரீட்

1987-ம் ஆண்டு, அக்டோபர் 19-ம் தேதி அமெரிக்க வர்த்தக வரலாற்றில் ஒரு கறுப்பு நாள். ஒரே நாளில் வரலாறு மாறுமென்றால், மாறும் என அமெரிக்காவை புரட்டிப்போட்டத் தினம் இன்று. அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பகுதியே நொறுங்கிப்போயுள்ளது. வர்த்தகப் புள்ளிகள் குறைந்தால் வர்த்தகர்களுக்கு அது அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் வர்த்தகத்தின் பெருஞ்சரிவு ஒரு நாட்டிற்கே பேரிடியாக விழுந்தது.
அதுவரையில் வர்த்தக வளர்ச்சியைக் கொடுத்து வந்த யுக்திகள் ஒரேடியாகத் தோற்று வீழ்ந்தன. ஒரே நாளில் அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக அந்தத் திங்கள்கிழமை வால் ஸ்ட்ரீட்டில் உள்ள வர்த்தக மையத்தில் வர்த்தகம் 23 சதவிகிதம் சரிந்து விழுந்ததாக அறிவிக்கப்படுகிறது. 

இன்றைய வர்த்தகம் போலவோ இன்றிருக்கும் சந்தை நிலையோ அன்றில்லை. சற்றும் எதிர்பாரா வர்த்தக நிதி சரிவு அந்நாளையே ‘கறுப்புத் திங்கள்’ ஆக வரலாற்றில் பதிவு செய்துவிட்டது. இந்த வரலாற்று நாள்தான் கணினி மயமாக்கப்பட்ட வர்த்தகத்தின் நிலைகெட்டத் தன்மையை வெளிப்படுத்திய ஒரு மிகச்சிறந்த உதாரணத் தருணம். இன்று 30-வது ’கறுப்புத் திங்கள்’ அமெரிக்க வர்த்தகச் சந்தையில் அனுசரிக்கப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!