இனி கூகுள் மேப் கொண்டு நிலா உட்பட மற்ற கோள்களுக்கும் போகலாம் ஒரு விசிட்!

பரந்துவிரிந்த இந்த உலகை, கூகுள் மேப் கொண்டு சுலபமாக அளந்துவிட முடியும். தொலைதூரத்தில் எங்கேயோ அமர்ந்தபடி, வேண்டிய இடத்தில் அங்குலம் அங்குலமாக என்னவெல்லாம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, இங்கே தமிழ்நாட்டின்  உசிலம்பட்டியில் இருந்துகொண்டு, கான்பெர்ராவில் இருக்கும் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் உள்ளே வரை சென்று வர முடியும். பல்வேறு சிறப்பம்சங்களுடன் அவ்வப்போது அப்டேட் ஆகிக்கொண்டிருக்கும் இந்தக் கூகுள் மேப்தான், தெரியாத ஊர்களில் வழிகாட்டி.

கூகுள் மேப் - ஸ்பேஸ் மெனு

படம்: Google Maps

சர்வதேச விண்வெளி நிலையம்

படம்: Google Maps

 இனி, கூகுள் மேப் கொண்டு மற்ற கோள்களையும் விரிவாக அலச முடியும். உதாரணமாக, நிலாவில் முதல் பல்வேறு கடினமான கோள்கள் உட்பட சின்னஞ்சிறிய புளூட்டோ வரை எட்டிப் பார்த்துவிட முடியும். இதற்கு, சாட்டிலைட் வியூவுக்குச் சென்றுவிட்டு, பூமியில் இருந்து ஜூம் அவுட்டானால் போதுமானது. நம் பால்வெளி மண்டலத்தின் மற்ற கோள்கள் கண்களுக்குப் புலப்படும். மெர்க்குரியின் பனி மூடிய பிரதேசங்கள் தொடங்கி, பல கோள்களின் பெரும் பள்ளங்கள், வெள்ளிக் கிரகத்தின் மேகமூட்டங்கள் வரை அனைத்தையும் இதுவரை கிடைத்த சாட்டிலைட் படங்களைவைத்தே கட்டமைத்திருக்கிறது. கடந்த ஜூலை மாதத்தின்போது, சர்வதேச விண்வெளி நிலையத்தை இங்கிருந்தே அலசிப்பார்க்கும் ‘Street View’ முறை அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்போது, அதையும் தாண்டி தன் எல்லைகளை விரிவுபடுத்தியுள்ளது கூகுள் மேப்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!