ஊழல் குற்றச்சாட்டுகள்: மேலும் ஒரு வழக்கில் சிக்கிய நவாஸ்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது மேலும் ஒரு ஊழல் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

நவாஸ்

உலகில் உள்ள பல முக்கியப் பிரமுகர்கள், ஊழல்செய்து சேர்த்த கறுப்புப் பணத்தைப் பாதுகாக்க, மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் முதலீடுசெய்து வருவதாக, 'பனாமா லீக்ஸ்' ஒரு பரபரப்பான செய்தியை வெளியிட்டது. உலகத்தையே பரபரக்கச்செய்த ஊழல் வெளியீட்டுப் பட்டியலில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பெயரும் சிக்கியிருந்தது பரபரப்பை அதிகப்படுத்தியது. நவாஸ் ஷெரீஃப் மட்டுமல்லாமல், அவரின் மகன்களும் இந்த ஊழல் வழக்கில் உள்ளதால், அவர்கள்மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கின் இறுதித் தீர்ப்பின்படி நவாஸ் ஷெரீஃபை பிரதமர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நவாஸ் ஷெரீப் குடும்பத்துக்குச் சொந்தமான ‘ஃபிளாக்‌ஷிப்’ நிதி நிறுவனம் வெளிநாடுகளில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் நடந்ததாகவும் நவாஸ்மீது தேசியப் பொறுப்புடைமை நீதிமன்ற நீதிபதி முஹம்மது பஷிர் சம்மன் இன்று குற்றப்பத்திரிகை பதிவு செய்தார். 

தொடர்ந்து நவாஸ்மீது மூன்று ஊழல் வழக்குகள் அடுத்தடுத்து பதிவு செய்யப்பட்டுள்ளது அவரின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது’ என நவாஸ் ஷெரீஃபின் வழக்கறிஞர் ஜாபிர் கான் கூறியுள்ளார்.
 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!