வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (23/10/2017)

கடைசி தொடர்பு:16:40 (23/10/2017)

’வடகொரியா மீதான அழுத்தத்தை அதிகரிப்போம்’: ஜப்பான் பிரதமர் சூளுரை!

'வடகொரியா மீதான அழுத்தத்தை அமெரிக்காவுடன் இணைந்து அதிகரிப்போம்’ என புதிதாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ள ஜப்பான் பிரதமர் அபே அறிவித்துள்ளார்.

ஜப்பான்

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில், தொடர் ஏவுகணை மற்றும் அணுகுண்டுச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. முன்னதாக, அமெரிக்காவின் போர் மிரட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், வடகொரியாவில் புதிய ஏவுகணைகளின் அறிமுகமும் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இதனால், சர்வதேச அளவில் பல நாடுகளின் கண்டனங்களைச் சம்பாதித்தது வடகொரியா. சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதச் சோதனைகளை நடத்திவரும் வடகொரியாமீது, ஐ.நா சபை பொருளாதாரத் தடை விதித்துள்ளபோதும், அதை வடகொரியா பொருட்படுத்தவேயில்லை. இந்நிலையில், உலக நாடுகள் பலவும் வடகொரியாமீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன. 

இந்நிலையில், ஜப்பானில் அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபே, சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறார். மீண்டும் ஆட்சி அமைக்கவிருக்கும் பிரதமர், வடகொரியா மீதான அழுத்தத்தை அமெரிக்காவுடன் இணைந்து அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை, ஜப்பான் அரசின் செய்தித்தொடர்பு அலுவலகம் வெளியிட்டு உறுதி செய்துள்ளது. மேலும் அடுத்த மாதம் 5-ம் தேதி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடன் வடகொரியா விவகாரம்குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் அபே அறிவித்துள்ளார்.