வெளியிடப்பட்ட நேரம்: 14:14 (25/10/2017)

கடைசி தொடர்பு:14:14 (25/10/2017)

உலகின் இரண்டாவது விண்கலம் சேலஞ்சரின் கமாண்டர் பால் விட்ஸ் மரணம் !

விண்வெளிக்குப் பறந்த இரண்டாவது விண்கலமான சேலஞ்சரின் கமாண்டர் பால் விட்ஸ், 85-வது வயதில் மரணமடைந்தார்.

சேலஞ்சர் விண்கலம்

அரிசோனாவில் உள்ள அவரது வீட்டில், அமைதியான முறையில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1966-ம் ஆண்டு, நாசா தேர்வுசெய்த 19 விண்வெளி வீரர்களுள், பால் விட்சும் ஒருவர். 1973-ம் ஆண்டு, விண்ணில் இயங்கிவந்த orbiting space laboratory எனப்படும் 'ஸ்கைலாப்', விண்வெளி ஆய்வு மையத்தின் கமாண்டராகப் பணியாற்றியுள்ளார். 

கொலம்பியாவுக்கு அடுத்ததாக 1983-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி, அமெரிக்கா ஏவிய 'சேலஞ்சர்' விண்கலத்தை இயக்கியது இவர்தான். ஃபுளோரிடாவில் உள்ள கென்னடி ஸ்பேஸ் சென்டரில் இருந்து சேலஞ்சரை விண்வெளியில் செலுத்தி, 5 நாள்களுக்குப் பிறகு 9ம்தேதி,கலிஃபோர்னியாவில் உள்ள எட்வர்ட்ஸ் ஏர் ஃபோர்ஸ் ஸ்டேஷனில் வெற்றிகரமாகத் தரையிறக்கினார். (1986-ம் ஆண்டு 10-வது முறையாக விண்ணுக்குச் செலுத்தப்பட்ட சேலஞ்சர், புறப்பட்ட 73-வது விநாடியில் வெடித்துச் சிதறியது. இதில், 7 விண்வெளி வீரர்கள் உயிரிழந்தனர்)  

விண்வெளி வீரர் பால் விட்ஸ் மரணம்

பால் விட்ஸ், 1932-ம் ஆண்டு  பென்சில்வேனியாவில் பிறந்தார். 1954-ம் ஆண்டு, ஏநோ நாட்டிக்கல் இன்ஜினீயரிங் முடித்தார். விண்வெளி வீரராவதற்கு முன், கடற்படை விமான பைலட்டாகப் பணியாற்றிய இவர், வியட்நாம் போரிலும் பங்கேற்றுள்ளார். பால் விட்ஸ், 793 மணி நேரம் விண்வெளியில் பறந்த பின்னர், 51-வது வயதில் பணியிலிருந்து ஓய்வுபெற்றார். ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் ஸ்பேஸ் சென்டரின் இணை இயக்குநராகவும் இருந்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க